Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முல்லை பெரியாறு... அரசியல் லாவணிக் கச்சேரி வேண்டாம்... கட்சிகளுக்கு தமிழருவி மணியன் அட்வைஸ்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் லாவணிக் கச்சேரிகளை அரசியல் கட்சியினர் கைவிட வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;

பெரியாறு அணைதான் தமிழகத்தின் தென்மாவட்ட மக்களின் ஜீவாதாரம். தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களின் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நீர்த்தேவையினையும், பல கோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் பூர்த்தி செய்து வருகிறது

Tamilaruvi manian says, Do not do politics at Mulla Periyar Dam issue

பெரியாறு அணையிலுள்ள பேபி அணையைப் பலப்படுத்த, மரங்களை வெட்ட அனுமதி கொடுத்து விட்டு, பின்னர் மாநில எதிர்க்கட்சிகள் குறிப்பாக தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் காங்கிரஸ் எதிர்க்குரல் கொடுத்தவுடன், சர்வ தேசியம் பேசும், உலகத் தொழிலாளர்களை ஒன்று சேரக் குரல் கொடுக்கும் பொதுவுடமைக் கட்சியின் கேரள மாநில அரசினர் பின்வாங்கி விட்டனர்.

தமிழகத்தில் ஆளும் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இவர்கள் கைகட்டி, வாய் பொத்தி கட்சி தர்மத்தை அணுவளவும் பிறழாமல் தமிழகத்தில் கடைப்பிடிக்கின்றனர். கேரள அரசியல் கட்சிகள் பெரியாறு பிரச்சனையை இடைவிடாது கிளப்பிக் கேரள மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி வருகின்றன. கேரளாவுக்கு நீர் தேவையா என்றால் அதுவும் இல்லை. பெய்யும் மழையின் பெரும்பகுதியைக் கடலுக்குத் திருப்பி விடுகிறது கேரளம்.

அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய்க் காரணத்தால் அணையில் நீர் தேக்கும் அளவை 136 அடியாகக் குறைத்த பிறகு தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகம். நீர் தேங்கும் கொள்ளளவு 10.4 டிம்சியில் இருந்து 6.4 டிஎம்சியாகக் குறைக்கப்பட்டதால் தமிழகத்தின் பாசனப்பகுதியில் 1,25,000 ஏக்கரில் முறையான விவசாயம் தொலைந்து போனது.

140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பெரியாறு மின்நிலையத்தில் 40 சதவிகிதம் உற்பத்தி குறைந்தது. விவசாய உற்பத்தி பாதிப்பு மற்றும் மின் உற்பத்தி பாதிப்பால் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் தமிழகம் இழந்தது சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய். இதனைப் பணமதிப்பாகப் பார்ப்பதை விட ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதைந்ததாகத் தான் பார்க்க வேண்டும்.

இப்படி அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பதை விட்டுவிட்டு வாக்கு வங்கியைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டு உள்ளனர், நமது அரசியல் கட்சியினர். வீணாகக் கடலில் கலந்தாலும், கவலை இல்லை, தண்ணீர் இல்லாமல் என் பக்கத்து மாநில மக்கள் தவிக்கட்டும் என்ற இந்த வறட்டுச் சிந்தனை மாற வேண்டாம்

'முப்பது கோடி முகமுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்' என்று நம்மைப் பற்றி உயர்வாகக் கனவு கண்டு விட்டுக் கண் மூடினானே, பாரதி, அவன் கவிதை நனவு ஆகாதா?

'குறுகிய சிந்தனைகளை விட்டு வெளியே வாருங்கள், நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்' என்று கேரளத்தின் அனைத்து தரப்பினரையும், தமிழக அரசியல் கட்சிகளே, 'அரசியல் லாவணிக் கச்சேரிகள் வேண்டாம்' என்றும், 'மாநில நலன் காக்க ஓரணியில் நில்லுங்கள்' என்றும் 'பெரியாறு அணையை மையப்படுத்தி ஆடும் அரசியல் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+