ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தர முடியும்.. முட்டுக் கொடுக்கும் தமிழருவியார்
சென்னை: ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தர முடியும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு முடிவு செய்த போதிலிருந்தே அவருக்கு அரசியல் ஆலோசகராக தமிழருவி மணியன் செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் ரஜினிக்காக ஒரு அரசியல் மாநாட்டை ஏற்பாடு செய்தார்.

இந்த நிலையில் ரஜினி இப்போது வருவார், அப்போது வருவார் என காத்திருந்து காத்திருந்து அவரது ரசிகர்களின் கண்கள் பூத்துவிட்டன. கடந்த 2017-இல் கட்சி ஆரம்பிப்பது எல்லாம் தயார் நிலையில் இருக்கு, சும்மா அம்பு மட்டும் விட்டால் போதும் என ரஜினி காந்த் கூறி சுமார் இரண்டரை ஆண்டுகளாகியும் இதுவரை எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை.
இதனால் ரஜினியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தமிழருவி மணியன் அவருக்கான ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தமிழருவியார் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறுகையில் ரஜினிகாந்த் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து நான் விலகியதாக வெளிவரும் தகவலுக்கு தகவலை மறுக்கிறேன். என்னுடைய அரசியல் வாழ்வு என்பது ரஜினி ஆதரவோடுதான் முடியும். ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தர முடியும் என உறுதியாக நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications