நள்ளிரவில் விம்மி விம்மி அழுத தமிழிசை... என்ன காரணம்னு பாருங்க மக்களே!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பாஜக படுதோல்வியடைந்த நிலையில் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி பேசியதை கேட்டு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்ணீர்விட்டுள்ளார்.
நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் நாடுமுழுவதும் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கோட்டையை தகர்த்து சாதனை படைத்துள்ளது.
பாஜக மட்டுமே தனித்து 303 இடங்களில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கிறது.

தமிழகத்தில் தோல்வி
ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அனைத்துக் கட்சிகளும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

தமிழிசை ட்விட்
இதற்கு பாஜக குறித்து எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டதே காரணம் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
|
அமைச்சரின் பேச்சு
அதில் அவர் கூறியிருப்பதாவது, நேற்று இரவு என் கண்களில் கண்ணீர் தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல. ஆங்கில தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவில் எங்கள் அமைச்சரின் பேட்டியை கேட்டதும் ஒரு எம்பியைகூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என்று பேசியதைக்கேட்டதும் ஆனந்தக்கண்ணீர் !! இவ்வாறு பதிவிட்டுள்ளார் தமிழிசை.

ஆனந்த கண்ணீர்
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரூ, 60,000 கோடி செலவில் கோதாவரி ஆற்று நீரை பெண்ணை - காவிரிக்கு கொண்டு வரும் மகத்தான திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியிருந்தார். அதனை குறிப்பிட்டு ஆனந்த கண்ணீர்விட்டுள்ளார் தமிழிசை.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications