ஆமா தமிழிசை தெலுங்கானா ஆளுநரா? இல்ல! தமிழக பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா.. சேகர்பாபு நறுக் கேள்வி
சென்னை: தமிழிசை தெலுங்கானாவின் ஆளுநரா இல்லை தமிழக பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 94 மாணவர்களுக்கு சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 28 மாதங்களில் அறநிலையத் துறையின் சார்பில் 1030 திருக்கோயில்களில் நன்னீராட்டு விழா நடந்தது.
அதில் 2022- 2023, 2023- 2024 ஆகிய இரு ஆண்டுகளில் 930 கட்டணமில்லா திருமணங்களை வசதி இல்லாதவர்களுக்கு நடத்தி வைக்கப்பட்டது. 2023- 2024-ஆம் நிதியாண்டில் முதல்வர் மேலும் ரூ 100 கோடியை மானியமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். 87 திருக்கோயிலில் 160 கோடி செலவில் திருக்கோயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
திருக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு எந்தவொரு முன்னுரிமையும் இல்லாததை தொடர்ந்து அனைத்து அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்ளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கி இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு 1000 ரூபாய் உதவி தொகை வழங்கி வருகிறோம்.
இந்த நிலையில் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த அர்ச்சகர்களும் 94 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கோட்பாட்டின் கீழ் இந்த பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் கோயில்களில் மந்திரங்கள் சொல்லும் போது சமூகநீதி பாதுகாக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதை தொடர்ந்து 1000-க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடந்தது.
இதில் எத்தனை கோயில்களுக்கு முதல்வர் சென்றதாக தமிழிசை சவுந்திரராஜன் பேசியது குறித்த கேள்விக்கு சேகர் பாபு பதிலளிக்கையில், தெலுங்கானாவுக்கும் புதுவைக்கும் தான் ஆளுநரே தவிர அவர் தமிழக பாஜகவின் கொள்கை பரப்பு செயலாலர் அல்ல. இகை கேட்கும் தார்மீக உரிமை அவருக்கு இல்லை. அவர் ஆளுநராக இருக்கும் மாநிலங்களில் இது போன்ற கும்பாபிஷேக நடவடிக்கையை முன்னெடுத்தால் இது போன்ற கேள்விகளை அவர் கேட்கலாம்.
போகிற போக்கில் ஏதாவது சிண்டு முடிஞ்சு வைக்கும் வேலையை புதுவையிலும் தெலுங்கானாவிலும் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மண் என் மக்கள் எடுபடவில்லை. அதனால்தான் அண்ணாமலை ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுக்கிறார். சனாதனத்தை பற்றி பேச அனைத்து அமைச்சர்களுக்கும் உரிமை உண்டு. சமத்துவம் குறித்தும் பேசுவோம்.
ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது. இது சமத்துவமான ஆட்சி. அனைத்து அமைச்சர்களுக்கும் சமத்துவம் பற்றி பேசும் உரிமை உண்டு. இது போன்ற போராட்டத்தை 45 ஆண்டுகலாக சந்தித்து வருகிறேன். இந்த உருட்டல் மிரட்டலுக்கு பயந்து எங்கள் பணிகளை செய்யாமல் இருக்க மாட்டோம். முதல்வர் இதுவரை 45 க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலையத் துறை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications