இஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி
ஏசி சண்முகம் குற்றச்சாட்டுக்கு தமிழிசை சவுந்தராஜன் பதில் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: வேலூர் தேர்தலில் ஏசி சண்முகம் தோற்க பாஜக காரணம் இல்லை என்றும், ஏசி சண்முகம் இப்படி ஏன் சொல்கிறார் என தெரியவில்லை என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர் தேர்தல் பிரச்சார சமயத்தில், பாஜக தலைமையின் ஒவ்வொரு செயல்பாடும் அதிமுக தலைமை வயிற்றில் புளியை கரைப்பதாகவே இருந்தது.
அதனால்தான், முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றிய நிலையில், பாஜகவை பிரச்சாரத்திற்கு வரவிடாமல் தடைபோட்டது அதிமுக என்று சொல்லப்பட்டது.

ஏசிஎஸ்
முத்தலாக் சட்டத்திற்கு அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் ஆதரவு அளித்து பேசியபோது, அதை எதிர்த்து கருத்துகூட சொல்ல முடியாத தர்மசங்கடத்துக்கு அதிமுக தலைமை ஆளானது. பாஜக கொடியைகூட தொகுதிக்குள் பறக்க விடாமல் கண்ணும் கருத்துமாக அதிமுக இருந்தநிலையில், ஏசிஎஸ் மட்டும் பாஜகவை அதிகம் நம்பினார்.

தோல்வி
தமக்காக பிரதமர் மோடியே பிரச்சாரத்துக்கு வருவார் என்றுகூட சொன்னார். ஆனால் எல்லாமே சுக்குநூறாக நொறுங்கி போய்விட்டது. நடந்து முடிந்த தேர்தலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். இப்போது, ரிசல்ட் வந்து 4 நாள் கழித்து தன்னுடைய தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசினார் ஏசிஎஸ். வேலூர் தேர்தலில் தான் தோற்றதற்கு காரணம் பாஜகதான் என்பதை மறைமுகமாக சொல்லி உள்ளார்.

வாக்குறுதி
அதில் "என்ஐஏ சட்டத் திருத்தம், முத்தலாக் சட்டம், 370 சட்டப் பிரிவு நீக்கம் ஆகியவற்றால் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்துள்ளார். இந்த அதிருப்தி மட்டும் இல்லாவிட்டால், 15,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பேன். இந்த அதிருப்தியால்தான் இஸ்லாமியர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டனர். ஆனாலும் வேலூர் மக்களுக்கு தாம் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன்" என்று தெரிவித்திருந்தார்.

தமிழிசை
ஏசிஎஸ்-ன் இந்த குற்றச்சாட்டிற்கு தமிழக பாஜக தலைவர் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். "ஏ.சி.சண்முகம் சொல்வது தவறு. பாஜகவால் அவர் தோற்கவில்லை. ஒருவேளை ஏசிஎஸ் சண்முகம் சொல்வதுபோல, இஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் 50,000 ஓட்டு வித்தியாசத்தில் அவர் தோற்றிருப்பாரே தவிர இப்படி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்க மாட்டார். அதனால் ஏசி சண்முகம் ஏன் இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை.

பாஜகவா?
உண்மையில் இஸ்லாமியர்கள் இந்த சட்டத் திருத்தங்களை எதிர்க்கவில்லை. ஆதரிக்கவே செய்கிறார்கள். எதிர்ப்பதாக சொல்வதா காங்கிரஸ்தான். எனவே ஏசிஎஸ் தோற்க நிச்சயம் இஸ்லாமியர்களோ அல்லது பாஜகவோ காரணம் இல்லை" என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

உறுப்பினர் சேர்க்கை
ஏன் வேலூர் பிரச்சாரத்துக்கு போகவில்லை என்று செய்தியாளர்கள் அன்று கேட்டதற்கு, "கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான பணிகள் நிறைய இருக்கு" என்று தமிழிசை காரணம் சொல்லி இருந்தது நினைவுகூரத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications