துரைமுருகனின் கோடிக்கணக்கான கருப்புப் பணம்.. தமிழகத்தை தலைகுனிய வைத்த திமுக.. தமிழிசை பாய்ச்சல்
Recommended Video
சென்னை: துரைமுருகன் வீட்டில் கோடிக்கணக்கான பணத்தை எடுத்ததால், தமிழகத்தையே திமுக வெட்கி தலை குனிய வைத்துவிட்டதாக தமிழிசை சவுந்தராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுநாள் வரை முக ஸ்டாலினை திட்டி தீர்த்த தமிழிசை சவுந்தராஜன், இப்போது துரைமுருகனை வறுத்தெடுத்து வருகிறார். குறிப்பாக துரைமுருகனின் பிரச்சார பேச்சுகளை வைத்தே கேள்வி கேட்டு குடைந்தெடுக்கிறார்.

வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் தன்னுடையதுதான் என்று யாரேனும் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவதாக ஏற்கனவே துரைமுருகன் அறிவித்து விட்டார்.
எனினும் இந்த கேள்விக்கு இதுவரை யாருமே பதில் சொல்லவில்லை. அதே சமயத்தில், கைப்பற்றப்பட்ட பணத்தை பற்றியும் பேசாமலும் இருப்பதில்லை. எதை பற்றி யார் எங்கே பேசினாலும், துரைமுருகன் வீட்டு பணத்தையே தொடர்ந்து விமர்சனம் செய்வது நடந்து வருகிறது.
அகிலஇந்தியஅளவில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஒரே தொகுதி வேலூர் காரணம் அங்கே பிடிபட்ட திமுக பொருளாளராக உள்ள துரைமுருகன் தொடர்புடன் பிடிபட்ட கோடிக்கணக்கான கருப்பு பணம் என்பது ஊரறிந்த உண்மை.தமிழகத்தை வெட்கி தலைகுனிய வைத்ததிமுக @mkstalin அவர்களே இதற்கு என்ன பதில்?shame DMK @arivalayam
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 10, 2019
தமிழிசை தனது ட்வீட்டில், "அகில இந்திய அளவில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஒரே தொகுதி வேலூர் காரணம் அங்கே பிடிபட்ட திமுக பொருளாளராக உள்ள துரைமுருகன் தொடர்புடன் பிடிபட்ட கோடிக்கணக்கான கருப்பு பணம் என்பது ஊரறிந்த உண்மை. தமிழகத்தை வெட்கி தலைகுனிய வைத்த திமுக @mkstalin அவர்களே இதற்கு என்ன பதில்?shame DMK @arivalayam" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழிசை கேட்டுள்ள இந்த கேள்விக்கு, திமுக தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்று பார்ப்போம்!












Click it and Unblock the Notifications