தாமரையை பூக்க வைப்பாரா டாக்டர்.. சூரியனை உதிக்க செய்வாரா கவிஞர்.. அனல் பறக்கும் தூத்துக்குடி
ஸ்டார் தொகுதியான தூத்துக்குடியை வெல்லப் போவது யார் என்பதில் பெரிய சிக்கல் எழுந்துள்ளது
Recommended Video

சென்னை: மல்லிகையை கொட்டி கனிமொழியையும், தாமரையை கொட்டி தமிழிசையையும் தொகுதி மக்கள் வரவேற்று கொண்டே இருப்பதால் ஸ்டார் தொகுதி தூத்துக்குடியேதான் என்பது பளிச்சென தெரிகிறது!
தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதி தூத்துக்குடி! நிறைய கிராமப்புற பகுதிகளை கொண்டது. விவசாயம் பிரதானம். ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி என்று பாசன பகுதியும் இங்கு உண்டு... கோவில்பட்டி, ஒட்டபிடாரம் என்ற வறண்ட பகுதியும் இங்கு உண்டு. இதைதவிர தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழில் இங்கு ரொம்பவும் ஃபேமஸ்! ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறைய தொழிற்சாலைகள் நிரம்பி உள்ளன.
ஸ்டெர்லைட் விவகாரத்துக்கு பிறகு குறிப்பாக துப்பாக்கி சூட்டிற்கு பிறகு தூத்துக்குடி சூடு பிடிக்க ஆரம்பித்தது. இப்போது தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த தொகுதி மீது மக்களின் கவனமும் திரும்பி உள்ளது.

சமூக வாக்குகள்
திமுக சார்பாக எம்பி கனிமொழியும், பாஜக சார்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜனும் களமிறங்கி உள்ளனர். இருவருமே வாரிசுகள்.. இருவருமே பிரபலங்கள்.. இருவருமே முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள்.. இருவருமே நாடார் சமூக மக்களை நம்பி களத்தில் இறங்கி உள்ளனர்!

கிராம சபை
இதில் கனிமொழியின் ஈடுபாடு சற்று அதிகம் என்றே சொல்லலாம். வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னேயே ஒரு கிராமத்தையே தத்தெடுத்து, அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டார். நாடார் இன மக்களை சந்தித்து பேசி வந்தார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களோடு கரம் கோர்த்தார். கிராம சபை கூட்டத்தின்போதும், மக்களின் மன வெகுவாக கவர்ந்தார்.

மைனஸ்
ஆனால் இது சாதி ரீதியான ஒரே ஒரு பொருத்தத்தை தவிர தமிழிசைக்கு தூத்துக்குடியில் வெற்றி பெறுவது எந்த அளவுக்கு சாத்தியம் என தெரியவில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தால் அதிமுக, பாஜக மீதான அதிருப்தி இன்னமும் மக்களுக்கு குறையாமல் உள்ளது தமிழிசைக்கு மிகப்பெரிய மைனசாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அடிப்படை பிரச்சனை
சாதியை தவிர்த்து விட்டு பார்த்தால், இவர்கள் இருவரும் எதற்காக, எதன் அடிப்படையில் தூத்துக்குடியை தேர்ந்தெடுத்து போட்டியிடுகிறார்கள் என்பது விளங்கவில்லை. ஏனென்றால் ஸ்டெர்லைட் விவகாரம் வந்து ஒருவருடம் தான் ஆகிறது. ஆனால் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகா வாரியாக ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. குடிநீர் பிரச்சனை, விவசாய பிச்சனை , கிராமப்புற அடிப்படை மேம்பாடு என எவ்வளவோ உள்ளது.

அதிருப்தி
இதையெல்லாம் சரிசெய்து விட்டோம் என்று அதிமுக கூட்டணியான பாஜக தரப்பு சொல்லி வாக்கு கேட்கிற போகிறதா, அல்லது இனிமேல் நாங்கள் வந்தால்இதையெல்லாம் செய்வோம் என்று சொல்லி திமுக வாக்கு கேட்க போகிறதா என தெரியவில்லை. ஆனால் ஈஸியாக ஜெயிக்க வேண்டிய தொகுதியை, அதுவும் அதிமுகவின் கோட்டையான தூத்துக்குடியை பாஜகவுக்கு ஒதுக்கிய அதிருப்தி நிச்சயம் அதிமுக தொண்டனுக்கு இருக்கவே செய்கிறது.

உதயசூரியன்
ஸ்டெர்லைட் விவகாரத்தினால் நேரடியாக போட்டி போட முடியாமல், அங்கு தமிழிசை நிறுத்தப்பட்டுள்ளதால், எதிர்ப்பு வாக்குகள் தமிழிசை மீதே விழும் என தெரிகிறது. அதையும் தாண்டி "டாக்டர்" தாமரையை கொண்டு வருவாரா? அல்லது "கவிஞர்" உதயசூரியனை எழ செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications