எல்லாமே செட்டப்பு... அவ்வளவும் நடிப்பு.. மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மீது தமிழிசை கடும் பாய்ச்சல்

ஸ்டாலினின் திண்ணை பிரச்சாரத்தை கிண்டல் செய்து தமிழிசை ட்வீட் போட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திண்ணை பிரச்சாரம் என்ற பெயரில் ஸ்டாலின் நடத்தி வருவது எல்லாமே நடிப்பு.. நாடகம்.. செட்டப் என்று சொல்லி ஏகப்பட்ட கேள்விகளை சரமாரியாக எழுப்பி உள்ளார் தமிழிசை சவுந்தராஜன்!

தமிழக பாஜக தலைவர் சவுந்தராஜன், அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய போகிறாரோ இல்லையோ, 2 நாளாக திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாகவே வறுத்தெடுத்து வருகிறார்.

தமிழிசையின் ட்விட்டர் பக்கம் சென்று பார்த்தால் திமுகவையும், ஸ்டாலினையும் விமர்சித்து பதிவுகளை தொடர்ச்சியாக போட்டு வைத்துள்ளார். மோடியை காவலாளி இல்லை, களவாணி என்று ஸ்டாலின் சொன்னதற்கே நேற்று பொங்கிவிட்டார் தமிழிசை.

முகாம்

முகாம்

இப்போது திண்ணை பிரச்சாரத்தில் திமுக இறங்கி உள்ளது. குறிப்பாக ஸ்டாலின், கனிமொழி, நேரு, என ஒரு பெரிய பெரிய ஜாம்பவான்கள் ஒட்டப்பிடாரத்தில் முகாமிட்டுள்ளனர். ஒரு வீடு விடாமல் ஸ்டாலின் அவர்கள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து தொகுதி கிராம மக்களிடம் பேசி வருகிறார். இது சம்பந்தமான போட்டோக்களும் வெளியாகி வருகின்றன.

செட்டப்-நடிப்பு

செட்டப்-நடிப்பு

இதையடுத்துதான், ஸ்டாலினின் திண்ணை பிரச்சாரத்தை தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். அழகிரி டீ ஷர்ட் போட்டுக்கிட்டு ஒருவர் ஸ்டாலினிடம் செல்பி எடுத்தாரே.. அதுகூட செட்டப் என்று சொல்லிவிட்டார்.

துணை முதல்வர்

"திண்ணை பிரச்சாரம் என்ற பெயரில் ஸ்டாலின் திண்ணை நாடகம் தன் கட்சியினரை ஏற்கனவே செட்டப் செய்து முன்தயாரித்த கேள்விகளுக்கு பதில் கூறுவதாக நடிப்பு! ஒட்டப்பிடாரத்தில் அடிப்படை வசதிகளை செய்யத் தவறிய 5முறை ஆண்ட திமுக ஆட்சி ஏன் செய்யவில்லை? துணைமுதல்வராக ஆண்டபோது தூத்துக்குடி கண்ணில் படவில்லையா?" என்று முதல் பதிவு.

வன்முறை கலாச்சாரம்

"அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை...எனக்கூறும் ஸ்டாலின் அவர்களே தூத்துக்குடியில் அனுமதியில்லாத துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு தன் சொந்த தம்பியையே சுட்டுக்கொன்றது உங்கள் கழக உடன்பிறப்பு தானே? திமுகவினரால் சொந்த தம்பிக்கு கூட பாதுகாப்பில்லையே? வன்முறைக் கலாச்சாரம் திமுக தானே?" என்கிறது 2-வது பதிவு.

அழகிரி பனியன்

"மதுரையில் பிரச்சாரத்தில் டீ குடிக்க சென்று எதிரில் அழகிரி பனியனுடன் செல்பி எடுக்க செய்த செட்டப் நாடகம் இம்முறை ஒட்டப்பிடாரத்திலும் திண்ணைப்பிரச்சாரமாக அரங்கேற்றம்" என்கிறது 3-வது பதிவு.

தமிழிசையின் இந்த ட்வீட்டுகளுக்கு எதிர்மறை, நேர்மறை விமர்சனங்கள், கண்டனங்கள், கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+