சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனம் இனத்துடன்தானே இணையும்? இவர்கள் ஏழை பங்காளர்களாம்? தமிழிசை யாரை விமர்சிக்கிறார்னு பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரபாபு நாயுடுவை விட அவரின் 3 வயது பேரன் 6 மடங்கு பணக்காரர்- வீடியோ

    சென்னை: சந்திரபாபு நாயுடுவின் பேரனுக்கு அவரை காட்டிலும் 6 மடங்கு சொத்து அதிகம் என்ற செய்தியை மேற்கோள் காட்டி அவர் ஸ்டாலினுடன் இணைந்ததை தமிழிசை சவுந்திரராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் சொத்து மதிப்பை அவர் ஆண்டுதோறும் தாமாக முன்வந்து வெளியிடுவது வழக்கம். இந்த வகையில் இந்த ஆண்டுக்கான சொத்து மதிப்பை அவரின் மகன் நரலோகேஷ் நேற்று வெளியிட்டார்.

    தலைக்கு மேல் டிக் மார்க்.. மாஜி அமைச்சரின் குடும்பத்துக்கே குறியா?.. புதுவையில் ரவுடிகளால் பரபரப்பு தலைக்கு மேல் டிக் மார்க்.. மாஜி அமைச்சரின் குடும்பத்துக்கே குறியா?.. புதுவையில் ரவுடிகளால் பரபரப்பு

    நாயுடு

    நாயுடு

    நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ. 2.53 கோடியில் இருந்து ரூ. 3 கோடியாக உயர்ந்துள்ளது. லோகேஷின் 3 வயது மகன் தேவான்ஷின் சொத்து மதிப்பு ரூ. 11.54 கோடியில் இருந்து ரூ. 18.71 கோடியாக உயர்ந்துள்ளது. நாயுடுவை விட அவரின் பேரன் 6 மடங்கு பணக்காரராக உள்ளார்.

    பிரதமர் கனவு

    இந்த செய்தி வெளியானது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நம்ம ஊர் அரசியல்வாரிசுகளை அடைக்கலம்,தேடிவரும் அரசியல் வாரிசு.? இனம் இனத்துடன்தானே இணையும்? இவர்கள்தான் ஏழை பங்காளர்களாம்? டீ விற்ற பிரதமர் அணியிலிருந்து விலகி விலாசம் தேடும் நாயுடு பிரதமர் கனவுடன்? என்று குறிப்பிட்டுள்ளார்.

    நக்கல்

    நக்கல்

    அதாவது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் நோக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதை நக்கலடிக்கும் விதமாக தமிழிசை இவ்வாறு டுவிட்டரில் கூறியுள்ளார்.

    விமர்சனம்

    விமர்சனம்

    அதுபோல் சந்திரபாபு நாயுடு கடந்த மக்களவை தேர்தலில் யாரை எதிர்த்து பிரசாரம் செய்தாரோ அவருடன் (ராகுல்) கூட்டணி அமைக்க டெல்லி சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதுவும் பாஜக மத்தியில் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

    English summary
    BJP State president Tamilisai Soundararajan criticises Chandra babu naidu and MK Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X