Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் பதவிக்கு குட்பை? லோக்சபா தேர்தலில் களமிறங்கும் தமிழிசை சவுந்தரராஜன்? பரவும் தகவல்.. உண்மையா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடுவதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் அதுபற்றிய கேள்விக்கு அவர் பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இவர் தமிழகத்தில் பாஜக சார்பில் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும் அவர் பாஜக தலைவர் பதவியில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

Tamilisai Soundararajan dismissed rumours that she will quit governor post and contest Lok Sabha election from Tamil Nadu

இந்நிலையில் தான் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு அவர் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது அந்த பொறுப்பில் அவர் செயல்பட்டு வருகிறார். இதுதவிர புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில் தான் சொந்தமாநிலமான தமிழ்நாட்டுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அடிக்கடி வந்து செல்கிறார். சமீபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை அவர் பார்வையிட்டார். அதோடு தமிழக அரசை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது பேசும் பொருளாகி இருந்தது. இதற்கிடையே தான் ஒரு தகவல் பரவ தொடங்கியது.

அதாவது அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட உள்ளார். இதற்காக விரைவில் அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் தான் அதுபற்றி தெலுங்கானாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதாவது அயோத்தி ராமர் கோவிலுக்கு 100 கதவுகள் செய்து வழங்கிய பவுன்பள்ளியில் அமைந்துள்ள அனுராதா டிம்பர்ஸ்க்கு தமிழிசை சவுந்தரராஜன் சென்ற நிலையில் அவரிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழிசை சவுந்தரராஜன், ‛‛நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்தால் அதுபற்றி உங்களிடம் நிச்சயமாக பகிர்வேன்’’ என்று மட்டுமே கூறிவிட்டு சென்றார்.

இந்நிலையில் தான் தற்போதைய அவரது பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழிசை சவுந்தரராஜன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளேன். போட்டியிடவில்லை என கூறவில்லை. மாறாக அவர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்தால் அதுபற்றி பகிர்கிறேன் என தெரிவித்துள்ளார். இதுதான் பேசும் பொருளாகி உள்ளது. அதாவது அரசியலை பொறுத்தமட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

மேலும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக வளர முயற்சித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதனால் பாஜக மேலிடம் கூறினால் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளாரா? இல்லை ஆளுநர் பதவியிலேயே தொடர்வாரா? என்பதை அறிய நாம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+