சாலமன் பாப்பையாவுக்கு இறுதி மூச்சு வரை இருந்த சுவாரஸ்யமான பழக்கம்! உருக்கமாக விவரித்த தமிழிசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா குறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். அது என்ன என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து அவர் புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இறப்பு தமிழ் போற்றும் ஒரு நல்லுலகிற்கு மிகப் பெரிய இழப்புதான்.

Solomon pappaiah tamilisai

பட்டாசு இருக்கிறதோ இல்லையோ, பட்டிமன்றம் இல்லாமல் தீபாவளி நகர்ந்ததில்லை. என் நினைவு தெரிந்து அவருடைய பட்டிமன்றம் இல்லாமல் தீபாவளி, பொங்கல் கொண்டாட்டங்கள் இல்லை. இந்த வெறுமையை யாராலும் நிரப்பிவிட முடியாது என்பதுதான் எனது கருத்து.

அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் கொடுப்பதற்காக, அவரை பற்றிய ஒரு தகவல்களை சேகரிக்கும் போது எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. அது என்னவெனில் , முதல் நிகழ்ச்சியில் இருந்து இன்று வரை பாப்பையா எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் செலகிறாரோ, அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை அவர் பத்திரமாக சேகரித்து வைத்திருக்கிறார் என்ற செய்தி எனக்கு மிகவும் ஆச்சரியத்தை தந்தது.

அந்தளவுக்கு தமிழ் மீதும் தன்னை அழைத்தவர்கள் மீதும் ஒரு பற்றும் பாசமும் கொண்டவர் என்பதை நினைக்கும் போது உண்மையிலேயே எனக்கு வியப்பாக இருந்தது. ஏனென்றால் இந்த காலத்தில் அழைப்பிதழையும் யாரும் மதிப்பதில்லை, அழைப்பாளர்களையும் யாரும் மதிப்பதில்லை.

அப்படியிருக்கும் போது சாலமன் பாப்பையா அந்த அழைப்பிதழ்களை எல்லாம் பத்திரமாக வைத்து அதை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் என்பதை நினைக்கும் போது அவர் ஒரு மாறுபட்ட தமிழறிஞர் என்பதை புரிந்து கொண்டேன்.

ஆரம்ப காலத்தில் சாலமன் பாப்பையாவும், என் தந்தை குமரி அனந்தனும் பட்டிமன்றத்தில் அவர்கள் பேசியிருக்கிறார்களாம். அதன் பிறகு அவர் பட்டிமன்றத்தில் நடுவராக வந்து சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை நான் என் தந்தை வாயிலாக கேள்விப்பட்டேன். எனவே அவரது இறப்பு தமிழுக்கு மிகப் பெரிய இழப்பு. இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்திருந்தார்.

மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் இறுதி சடங்கு வழிபாடு மதுரை வெப் சர்ச்சில் நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று இறுதி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

வழிபாட்டின்போது, சாலமன் பாப்பையாவுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட அரசு மரியாதையையும், அவரது இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதையும் குறிப்பிட்டு, தமிழக முதல்வர் விஜய்க்கு வெப் சர்ச் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சாலமன் பாப்பையாவை நேசித்த பொதுமக்கள், ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் சமூகத்தினர் அனைவருக்காகவும் பிரார்த்தனை நடைபெற்றது. அவரது நினைவு தொடர்ந்து நிலைத்திருக்கவும், அவரது பணிகள் மூலம் தமிழ் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படவும் இறைவேண்டுதல் நடைபெற்றது.

இதையடுத்து, இறுதி பிரார்த்தனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து சாலமன் பாப்பையாவின் உடல் அங்கிருந்து இறுதி ஊர்வலமாக மதுரை தத்தனேரி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

அன்பு பெரியோர்களே, அருமை தாய்மார்களே என்பதை வரும் விநாயகர் சதுர்த்தி பட்டிமன்றத்தில் கடைசியாக கேட்க போகிறோம் என்பதை நினைத்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் கண்ணீர் விடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+