இந்தி திணிப்புக்கு தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு.. டெல்லிக்கு பறந்த கோரிக்கை!
சென்னை: திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு 'கர்தவ்ய த்வார்' என இந்தியில் பெயர் சூட்டியிருப்பதற்கு தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தி பெயரை உடனடியாக நீக்கி தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் கர்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கர்தவ்ய த்வார் என தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு புரியாத வகையில் இப்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் பெயர் பலகையை வைக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் அவர் வலியுறுத்தி உள்ளார். சில அதிகாரிகள் செய்த தவறால் மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், "மதிப்பிற்குரிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜி.எம்.எஸ். ரயில்வேக்கு நமது மொழி தமிழ் மொழிபெயர்ப்பை முறையாக வைக்கவும், தமிழ் மொழி பலகையை முறையாக வைக்கவும் அறிவுறுத்துங்கள். ஏனெனில், சில அதிகாரிகள் செய்த தவறுகள் காரணமாக, மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தேவையற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பதிவில், "புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்தவ்ய த்வார்" என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரயில்வே. "கர்தவ்ய த்வார்" என்றால் தமிழில் "கடமையின் நுழைவுவாயில்" என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை "இந்தித் திணிப்பு" மட்டுமே. தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்." எனத் தெரிவித்து இருந்தார்.
-
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்!












Click it and Unblock the Notifications