மரியாதை கொடுப்பது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருனு தெரியுமா? புகைப்படத்தால் மாட்டிய தமிழிசை!
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா யாரென்று தெரியாமல், வவேசு ஐயரின் புகைப்படத்தைப் பதிவிட்டு தமிழிசை செளந்தரராஜன் நினைவு நாளன்று மரியாதை செலுத்தி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. சுப்பிரமணிய சிவாவிற்கும், வவேசு ஐயருக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிந்து பின் மரியாதை செலுத்துமாறு தமிழிசையைப் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் சுப்பிரமணிய சிவா. விடுதலை போராட்டத்தில் இளைஞர்களைத் தனது எழுச்சிமிக்க பேச்சால் கட்டிப்போட்டவர் சுப்பிரமணிய சிவா. சிறுவனாக இருந்த போதே ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வந்த போயர்களுக்கு ஆதரவாகக் கவிதைகளை எழுதியவர்.

திலகரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு ஓயாமல் தொல்லை கொடுத்து வந்தவர். இவரின் 100வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு தரப்பினரும் சுப்பிரமணிய சிவாவிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சுப்பிரமணிய சிவாவிற்கு தனது எக்ஸ் பக்கத்தில் மரியாதை செய்து பதிவிட்டுள்ளார்.
அதில், விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவுதினத்தில், அவரின் தியாகத்தையும் தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் தமிழிசை செளந்தரராஜன் சுப்பிரமணிய சிவாவின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது சுப்பிரமணிய சிவா அல்ல என்பது தெரிய வந்துள்ளது.
சுப்பிரமணிய சிவாவிற்கு பதிலாகத் தமிழிசை செளந்தரராஜன், வ.வே.சு.ஐயரின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இதனால் சோசியல் மீடியாவில் தமிழிசை செளந்தரராஜனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சுப்பிரமணிய சிவாவிற்கு மரியாதை செய்வதோடு மட்டுமல்லாமல், சுப்பிரமணிய சிவா யாரென்று பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
வவேசு ஐயர் பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில், இங்கிலாந்து அரசனுக்கு இந்தியன் ஆகிய நான் ராஜ விஸ்வாச பிரமாணம் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியதோடு, பட்டத்தைப் பெறவும் மறுத்தவர். சாவர்க்கரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட வவேசு ஐயர், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். இதனால் சுப்பிரமணிய சிவாவிற்கும், வவேசு ஐயருக்கும் வித்தியாசத்தைக் கண்டறிய தமிழிசைக்கு பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications