சென்னை தெற்கில் தமிழிசை? தூத்துக்குடியில் கனிமொழி vs ராதிகா? நோ அது எங்க லிஸ்ட் இல்லை.. பாஜக விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட உள்ள 10 முக்கியமான தொகுதிகளின் உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் என்று ஒன்று இணையத்தில் சுற்றி வந்தது. இது உண்மையான வேட்பாளர் பட்டியல் இல்லை என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் வரிசையாக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. முன்பே 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக முதல் கட்டமாக அறிவித்தது. இந்தப் பட்டியலில், மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத்தின் காந்திநகரில் மீண்டும் களமிறங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், ஸ்மிருதி இரானி அமேதியிலும் போட்டியிடுவார்கள், ஸ்மிருதி இரானி 2019 இல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அசத்தல் வெற்றியைப் பெற்றார். ராஜஸ்தானின் கோட்டாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

28 பெண்கள், 50 வயதுக்குட்பட்ட 47 தலைவர்கள், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 57 பேர் என 34 மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 195 பேரில், 51 பேர் அனைத்து முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 20 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஐந்து பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.

Tamilisai Soundararajan Radhika Sarathkumar Annamalai may find their names in BJP Tamil Nadu candidate list

இரண்டாம் கட்ட லிஸ்ட்; இது போக 2024 மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை மார்ச் 13 அன்று வெளியிட்டது. அனுராக் தாக்கூர், ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பசவராஜ் பொம்மை, பியூஷ் கோயல், அனில் பலுனி உள்ளிட்ட 72 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியிலும், கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

விரைவில் தமிழ்நாடு: இந்த நிலையில்தான் விரைவில் தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலை 2 - 3 நாட்களில் பாஜக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இடையே ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். இதனால் எங்கே அவர் வேட்பாளராக களமிறக்கப்டுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் போட்டியிட போகிறேன் என்று தமிழிசையும் உறுதி செய்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட உள்ள 10 முக்கியமான தொகுதிகளின் உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் என்று ஒன்று இணையத்தில் சுற்றி வந்தது. இது உண்மையான வேட்பாளர் பட்டியல் இல்லை என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது.

அந்த லிஸ்டில், தூத்துக்குடியில் ராதிகா சரத் குமார் கனிமொழியை எதிர்த்தும், தமிழிசை சௌந்தரராஜன் சென்னை தெற்கில், அண்ணாமலை கரூரில், கோவையில் ஏபி முருகானந்தம், திருச்சியில் ஆசிர்வாதம் ஆச்சாரி, சிதம்பரம் தடா பெரிய சாமி , சிவகங்கை சத்யநாதன், தென்காசி அனந்தன் அய்யாசாமி , ராமநாதபுரம் முருகானந்தம் எம், கன்னியாகுமரி விஜயதாரணி, நெல்லை நயினார் பாலாஜி ஆகியோர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால் இது பொய்யான லிஸ்ட் தங்களுடையது இல்லை என்று பாஜக மறுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+