விஜய் கோபப்படுவார் என்பதற்காக உதயநிதி ஸ்டாலினின் "அஜித் சார்" வாழ்த்து? தமிழிசை சவுந்தரராஜன் டவுட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காகவே நடிகர் அஜித்துக்கு திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாரா? என தமக்கு தெரியவில்லை என தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், அனைத்து மக்களும் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். பசும்பொன் தேவர் திருமகனார் மகிழும் அளவுக்கு திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆன்மீகமும் அரசியலும் எனது இரு கண்கள் என்றார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். ஆனால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆன்மீகமும் அரசியலும் கலக்க முடியாது என்கிறார்.

dmdk tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார்.. அஜித்துக்கு வாழ்த்துச் சொன்னால் விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக சொன்னாரா? என எனக்கு தெரியவில்லை. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு, உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய @SportsTN_ (SDAT) Logo-வை 'அஜித்குமார் ரேசிங்' யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார் என பதிவிட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+