Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை - எடப்பாடி ஆவேச மோதல்.. “நானும் தலைவரா இருந்திருக்கேன்”.. தமிழிசை கொடுத்த அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலத் தலைவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது; ஆனால் கடும் சொற்கள் கூடாது என்று கூறி உள்ளார்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தை மோதல் முற்றியுள்ளது. அண்ணாமலை பேச்சு சிறுபிள்ளைத்தனமானது என்றும் மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு அண்ணாமலை கடுமையாக பதிலடி கொடுத்தார்.

Tamilisai Soundararajan annamalai edappadi palaniswami

பாஜக சார்பில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, டெண்டர் முறை கட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி மாறியுள்ளது. எனது நேர்மை, நாணயத்தை பற்றி எடப்பாடி பழனிசாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். எவரோ ஒருவரின் காலில் தவழ்ந்து பதவியைப் பிடித்த தற்குறி எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி பேச தகுதி இல்லை என காட்டமாக விமர்சித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை மிகக் கடுமையாக விமர்சித்து பேசியது விவாதமாகி உள்ள நிலையில், இது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்திருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து முதல்வர் ஸ்டாலினிடமிருந்து வரும் என எதிர்பார்த்தோம். முருகன் மாநாட்டை நேரில் செல்லாமல், காணொளி வழியாக துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், சாதி, மத வேற்றுமை பார்ப்பதில்லை எனக் கூறினார். அப்படியானால், கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தை முதல்வர் தெரிவித்திருக்க வேண்டும். கிறிஸ்தவ பள்ளிகளிலும், மதரஸாக்களிலும் அவர்கள் மதப்படிதான் கல்விக்கூடத்தை நடத்துகிறார்கள்.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகளில் கந்தஷஷ்டி கவசம் படிப்பதில் என்ன தவறு இருக்கிறது. இன்னும் சொல்வதானால், இதை அனைத்து பள்ளிகளிலும் கொண்டுவர வேண்டும் என்பது என் கருத்து. விசிக எம்.பி ரவிக்குமார் இந்து கோயில்களிலிருந்து வரும் வருவாய் தேவையில்லை எனக் கூறமுடியுமா? வருவாய் மட்டும் தேவை, அதன் நம்பிக்கை தேவையில்லை என்பது எப்படி நியாயம்?" எனக் கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், "பொது மேடையில் பேசுவதில் அவரவர்களுக்கென ஒரு பாணி இருக்கும். அண்ணாமலை பேசியது அவரது பாணி. ஆனால், என்னைப் பொறுத்தவரை தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்பது எனது கோரிக்கை.

அதிமுகவுடன் பாஜக இனி எப்போதும் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறியிருக்கிறார். ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக கருத்து சொல்வதற்கும், முடிவெடுப்பதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது. பின்பு அது விவாதங்களுக்கு உட்படுத்தப்படலாம். தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்படலாம். எனவே மேடையில் மட்டுமே முடிவு செய்வது என்பது எனது அரசியல் அனுபவத்தில் சரியா என்பது என் கேள்வி?

இதை வைத்து அண்ணாமலைக்கும் எனக்கும் சர்ச்சையை ஏற்படுத்திவிடக் கூடாது. எனது அணுகுமுறை வேறு, அவரது அணுகுமுறை வேறு. நானும் அதே கட்சியில் ஐந்தரை வருடங்கள் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்தவள்தான். மாநிலத் தலைவராக அவரின் கருத்துகளை உறுதியாக சொல்கிறார். ஆனால், கட்சியின் கருத்து, நிர்வாகிகளின் கருத்து எல்லாம் கேட்கப்பட்டு, அதில் ஒரு முடிவுக்கு வரலாம்.

மாநிலத் தலைவரின் கருத்தை, அந்தக் காலப்பொழுதில் ஏற்றுக்கொள்வதுதான் ஒரு கட்சியின் காரியக்கர்த்தாக்களின் முடிவாக இருக்க முடியும். அதனால் அதை ஏற்கிறேன். ஒருகோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது எங்கள் குறிக்கோளாக இருக்கிறது. இப்போது எங்களின் முழு கவனம் அதில்தான் இருக்கிறது. அதில் இருந்து கவனத்தை சிதறடிக்க விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+