புதிய கீதை வழியாக.. நல்லது நடக்க தம்பி விஜய் துணை நிற்கணும்.. கூட்டணிக்கு அழைத்த தமிழிசை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய கீதை வழியாக தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க தம்பி விஜய் துணை நிற்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். விஜய்-க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ள அவர், வாரிசு அரசியலை எதிர்த்ததால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து சுறாவாக நீந்தி கில்லியாக வெற்றி கண்ட தமிழன் என்றும் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி தவெகவினர் மாநிலம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிறந்தநாளை ஒட்டி ஜனநாயகன் படத்தில் கிளிம்ஸ் காட்சிகளை படக்குழு நேற்றிரவு வெளியிட்டது. அதில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

Tamilisai Soundararajan Urges TVK Leader Vijay to Stand for Good and join in the BJP alliance

ஜனநாயகன் விஜய்

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள விஜய், இனி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் இயங்க உள்ளார். ஏற்கனவே ஜூலை 2வது வாரத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 42 நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் வாரியாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தவெக யாருடன் கூட்டணி?

இந்த சுற்றுப்பயணம் திருச்சி அல்லது மதுரையில் இருந்து தொடங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், விஜய் களத்திற்கு வர வேண்டும் என்பதே அக்கட்சியினர் விருப்பமாக உள்ளது. இதனிடையே தவெகவை கூட்டணியில் இணைக்க அதிமுக மற்றும் பாஜகவினர் தீவிரமாக இருக்கின்றனர்.

அமைதி காக்கும் அதிமுக

ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களுடன் நடந்த கூட்டத்தில் விஜய் மற்றும் தவெகவை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார். அதேபோல் பாஜகவின் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் விஜய்-க்கு தொடர்ந்து கூட்டணி அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் தவெக தரப்பில் தொடர்ந்து அமைதி காக்கப்பட்டு வருகிறது.

தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து

இந்த நிலையில் விஜய் பிறந்த நாள் வாழ்த்திலும் கூட தமிழிசை செளந்தரராஜன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில், நாளைய தீர்ப்பு-இல் ஆரம்பித்து அழகிய‌ தமிழ் மகனாக வலம் வந்து திருப்பாச்சி-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தியவர்.

கூட்டணிக்கு அழைப்பு

"வாரிசு" அரசியலை எதிர்த்ததால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி திரு.விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இது பாஜக மற்றும் தவெகவினர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+