கமர்கட் தந்து காது கம்மலை திருடிய தி.மு.க.... வார்த்தை ஜாலங்களில் விளையாடும் தமிழிசை
சென்னை: பொய்யான வாக்குறுதிகள் எனும் கமர்கட் தந்து கம்மலை திருடிய திமுக என கடுமையாக சாடியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக தி.மு.க.-காங் கூட்டணி எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து பெருமிதப்படும் ஸ்டாலின், அவைக்குறிப்பில் ஏறாத கோஷங்கள், கோரிக்கை மனு அளிப்பு வேஷங்கள், இல்லாத இந்தி திணிப்பு எதிர்ப்பு நாடகங்கள், வந்துவிட்ட நீட் தேர்வுக்கு வீண் எதிர்ப்பும், வர மறுத்த காவிரி நீரை கோர மறந்த கூட்டணி தர்மம்?.

ஏற்கனவே இருந்த ரயில் ஊழியர் மொழி பயன்பாட்டு அரசாணைகளை உடனே அமலாக்கிய மைய அரசின் வேகத்தை எம்.பி.க்கள் சாதனை என வீண் ஜம்பம். பொய் வாக்குறுதி எனும் கமர்கட் தந்து காது கம்மலை திருடிய தி.மு.க., ஊழல் விஞ்ஞானிகளின் காதறுந்த ஊசிகள் அங்கே.
வீண் ஜம்பம் இங்கே? இனி தமிழகம் ஏமாறப்போவதில்லை தாமரை மலர்ந்தே தீரும். எதுவும் செய்ய இயலாதவர்கள் விமர்சிக்கிறார்கள் என்கிறார் ஸ்டாலின்.
ஆம். பொய் வாக்குறுதி தர இயலாதவர்கள், ஓட்டுக்கு பணம் தர இயலாதவர்கள், ஊழல் செய்ய இயலாதவர்கள், வாரிசு அரசியல், குடும்ப அரசியல் செய்ய இயலாதவர்கள், கருப்பு பணம் பதுக்கி பணம் சேர்த்து அரசியல் வியாபாரம் செய்ய இயலாதவர்கள், தமிழ் மொழியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த இயலாதவர்கள். ஆனாலும் விமர்சிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications