விளம்பரத்திற்காக பேசுவதை இதோடு நிறுத்திக்குங்க.. இயக்குநர் ரஞ்சித்துக்கு தமிழிசை எச்சரிக்கை!
Recommended Video
சென்னை: ராஜ ராஜ சோழன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது விளம்பரத்திற்காக என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சித்தது தமிழகம் முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சித்துக்கு பல்வேறு தமிழ் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரஞ்சித் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியதால் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

19ஆம் தேதி வரை தடை
அந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற கிளை ரஞ்சித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் வரும் 19ஆம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

திரித்து கூறுவது தவறு
இந்நிலையில் ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்எல்லோரும் மதிக்கும் தமிழக வரலாற்றை திரித்து நாகரிகமற்ற முறையில் கூறுவது தவறு என்றார்.

விளம்பரத்திற்காக பேசியிருக்கிறார்
வரலாற்று ஆதாரம் இல்லாமல் பிரிவினை ஏற்படுத்துவதை போல போகிற போக்கில் பேசுவதை சிலர் நிறுத்தி கொள்ள வேண்டும். ரஞ்சித் விளம்பரத்திற்காகவும் பிரிவினையை தூண்டுவதற்காகவும் பேசியிருக்கிறார்.

பிரிவினையை தூண்டிவிடுகிறார்கள்
2 படம் எடுத்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்து கொள்கின்றனர். பட்டியலின மக்களுக்காக போராடுவதாக கூறி பிரிவினையை தூண்டிவிடுகிறார்கள்.

நட்புறவோடு உள்ளது
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, தேர்தல் நேரத்தில் அமைவது தான் கூட்டணியே தவிர தற்போதும் அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு தான் உள்ளோம். இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications