சென்னை அண்ணா சாலையில் கார் மீது மோதிய ஆளுநர் தமிழிசையின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வேன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் பாதுகாப்புக்கு சென்றுவிட்டு திரும்பிய போலீஸ் வேன் விபத்துக்குள்ளானது.
தெலுங்கானா மாநில ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார் தமிழிசை சவுந்திரராஜன். இவருடைய பாதுகாப்பு பணிக்கு போலீஸ் வேன் சென்றது.

இந்த வேன் அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது சென்னை அண்ணா சாலையில் சையது இம்ரான் கான் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார்.
அவருடைய காரில் இருந்த பிரேக்கை சையது திடீரென அழுத்தியுள்ளார். இதனால் காரின் பின்னால் வந்த போலீஸ் வாகனம் கார் மீது மோதியது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயம் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications