தமிழ்நாடு மழை.. தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய வானிலை தகவல்கள் - முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் மழை தொடர்பான 10 முக்கியமான தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வடமாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.

    தகவல் 1 தாழ்வு பகுதி

    தகவல் 1 தாழ்வு பகுதி

    முதலில் தென்மேற்கு வங்கக்கடலில் தாழ்வு பகுதி உருவாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்று சுழற்சி நீடிக்கும். ஆனால் இது தாழ்வு பகுதியாக மாறாது என்று வானிலை மையம் அறிவித்தது. அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சிதான் கனமழையை கொடுக்கும். இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறாது.

    தகவல் 2 இந்தியா வானிலை மையம் அறிவிப்பு :

    தகவல் 2 இந்தியா வானிலை மையம் அறிவிப்பு :

    இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 30ம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். இன்று இரவு வரை தென் மாவட்டங்களில் மழை பெய்யும். பின்னர் தென் மாவட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும். மாறாக வடமாவட்டங்களில், டெல்டா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கும். 30ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை முதல் தீவிர கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வரும் நாட்களில் மழை தீவிரம் எடுக்கும்.

    தகவல் 3 ரெட் அலர்ட் :

    தகவல் 3 ரெட் அலர்ட் :

    இன்றில் இருந்து நாளை காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் முழுக்க தீவிர கனமழை பெய்யும். இதனால் வங்கக்கடலை ஒட்டி இருக்கும் மாவட்டங்கள் அனைத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, காரைக்கால். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30 மணி வரை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

     தகவல் 4 ஆரஞ்ச் அலர்ட்:

    தகவல் 4 ஆரஞ்ச் அலர்ட்:

    இன்றில் இருந்து நாளை காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் உள் மாவட்டங்கள் சிலவற்றுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, குமரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலை கிழக்கு அதிக மழையை பெற வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தகவல் 5 மஞ்சள் அலர்ட்

    தகவல் 5 மஞ்சள் அலர்ட்

    இன்றில் இருந்து நாளை காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் சிலவற்றுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அலர்ட்டும் நாளை காலை 8.30 மணி வரையிலான அலர்ட்தான்.

    தகவல் 6- 27-28ம் தேதி அலர்ட்:

    தகவல் 6- 27-28ம் தேதி அலர்ட்:

    இது போக நாளை காலை 8.30 மணியில் இருந்து மறுநாள் 28ம் தேதி காலை 8.30 மணி வரை பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி கரூர், திருச்சி, குமாரி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலிக்கு தீவிர கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது

    தகவல் 7 தமிழ்நாடு வெதர்மேன்;

    தகவல் 7 தமிழ்நாடு வெதர்மேன்;

    இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். அவரின் போஸ்ட் சுருக்கமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை செஞ்சுரி அடித்துள்ளது. இன்றும் நாளையும் சென்னை - நாகப்பட்டினம் பெல்ட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். டெல்டா முதல் ராமநாதபுரம் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், விழுப்புரம், நாகை, பெரம்பலூர், தஞ்சாவூர், செனகல்பேட்டை, திருவண்ணாமலையின் கிழக்கு இடங்கள், கள்ளக்குறிச்சி, அரியலூர், காரைக்கால், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் எல்லாம் மழை பெய்யும். சென்னை முதல் கடலூர் வரை கனமழைக்கு ஏற்ற இடமாக இருக்கும்.

    தகவல் 8 இதுவரை பெய்த மழை:

    தகவல் 8 இதுவரை பெய்த மழை:

    நேற்று காலை முதல் இன்று காலை வரை காயல்பட்டினம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், ஒட்டபிடாரம், மணியாச்சி, கடம்பூர், வேதநத்தம், எட்டயபுரம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளது. காயல்பட்டினத்தில்தான் 306 மிமீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடி 266.60 மிமீ மழையை நேற்று பெற்றது. திருச்செந்தூர் 248 மிமீ மழையை கடந்த 24 மணி நேரத்தில் பெற்றது. அதிலும் நேற்று காலை 6 மணி நேரத்தில் திருச்செந்தூரில் 175 மிமீ மழை பெய்துள்ளது, ஸ்ரீவைகுண்டம் 179மிமீ, குலசேகரப்பட்டினம் 158 மிமீ, சாத்தான்குளம் 121மிமீ, ஒட்டபிடாரம் 121மிமீ, மணியாச்சி 87மிமீ, கடம்பூர்90 மிமீ, வேதநத்தம் 80 மிமீ, எட்டயபுரம் 78 மிமீ, கோவில்பட்டி 71 மிமீ அளவு மழை பெய்துள்ளது.

    தகவல் 9 ரெக்கார்ட்:

    தகவல் 9 ரெக்கார்ட்:

    தமிழ்நாட்டில் இப்போது பெய்துள்ளது ரெக்கார்ட் மழையாகும். தமிழ்நாட்டில் இந்த வடகிழக்கு பருவமழையில் இன்று இரவு அல்லது நாளை காலையோடு 600 மிமீ மழை அளவை பெறும். 2015க்கு பின் இவ்வளவு மழையை தமிழ்நாடு பெறுகிறது. சென்னையில் இன்னும் 100மிமீ மழை பெய்தால் இந்த மாதத்தின் சராசரி மழை அளவு 1000 மிமீ அளவை தாண்டும். இதற்கு முன் மொத்தமாக 10 வருடங்கள் மட்டுமே இவ்வளவு அதிக மழை பெய்துள்ளது. தற்போது வரை தமிழ்நாட்டில் 583.6 மிமீ மழை பெய்துள்ளது. இன்னும் 200 mm மழை பெய்தால் 2005ல் பெய்த வடகிழக்கு பருவ மழை ரெக்கார்டை தமிழ்நாடு முறியடிக்கும்.

    தகவல் 10

    தகவல் 10

    கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பாக இருக்கும். 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+