10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. அறிவியலில் சென்டம் அடித்த 10 ஆயிரம் பேர்.. ஆங்கிலத்தில் அதிக தேர்ச்சி
சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த வருடம் மாணவ, மாணவிகள் ஆங்கிலம் பாடத்தில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். அதேபோல அறிவியல் பாடத்தில் 10,000க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் சென்டம் எடுத்துள்ளனர். மேலும் சில முக்கிய தகவல்கள் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வை 4,35,119 மாணவிகள் 4,36,120 மாணவர்கள் உள்பட 8,71,239 பேர் எழுதினார்கள். இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.88 சதவீதம், மாணவர்கள் 91.74 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

மொத்தம் 1,867 அரசுப்பள்ளிகள் உள்பட 4,917 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.52 சதவீதம் கூடுதலாகவும், இருபாலர் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.22 சதவீதம் கூடுதலாகவும் தேர்ச்சி பெற்றுள்ளன. சிவகங்கை மாவட்டம் 98.31 சதவீதம் தேர்ச்சியுடன் முதல் இடத்தையும், விருதுநகர் (97.45%), தூத்துக்குடி(96.76%), கன்னியாகுமரி(96.66%), திருச்சி(96.61%) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் சிவகங்கை மாவட்டம் (97.49%) முதல் இடத்தை பிடித்துள்ளது. விருதுநகர் (95.57%), கன்னியாகுமரி(95.47%), திருச்சி(95.42%), தூத்துக்குடி(95.40%) மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களில் தேர்வு எழுதிய 12,290 பேரில் 11,409 பேர் (92.83%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிறை வாசிகளில் தேர்வு எழுதிய 237 பேரில் 230 பேரும் (97.05%), தனித்தேர்வர்களில் தேர்வு எழுதிய 23,769 பேரில் 9,616 பேரும் (40.46%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக கடந்த 2024 பொதுத் தேர்வுடன் ஒப்பிடும்போது, தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 2.25 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாடம் வாரியாக மாணவ, மாணவிகள் ஆங்கிலம் பாடத்தில் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் (99.46%), அதற்கு அடுத்தபடியாக சமூக அறிவியல் பாடத்தில் (99.49%), தமிழ் பாடத்தில் (98.09%), அறிவியல் பாடத்தில் (97.90%), கணிதம் பாடத்தில் (96.57%) பேர் தேர்ச்சி சதவீதம் பதிவாகியுள்ளது.
அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 10,838 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சென்டம் அடித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சமூக அறிவியல் பாடத்தில் 10,256 பேரும், கணிதம் பாடத்தில் 1,996 பேரும், ஆங்கிலம் பாடத்தில் 346 பேரும், தமிழ் பாடத்தில் 8 பேரும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சென்டம் அடித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications