சிபிஎம், சிபிஐ கட்சிகள் எந்த தொகுதிகளில் போட்டி? திருப்பரங்குன்றத்தில் நேரடியாக களமிறங்கும் திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக அறிவித்துள்ளது. அதன்படி சிபிஐ கட்சித் தரப்பில் தளி, திருத்துறைப்பூண்டி, திருவில்லிபுத்தூர், திருப்பூர் வடக்கு, பவானிசாகர் தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை, பத்மநாதபுரம், பழனி, திருவொற்றியூர் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த முறை தலா 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

Tamilnadu Assembly Election 2026

அதன்படி சிபிஎம் கட்சி இம்முறை கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை, பத்மநாபபுரம், பழனி மற்றும் திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளாகும். இதில் பத்மநாபபுரம் தொகுதி அமைச்சர் மனோ தங்கராஜ் சொந்த தொகுதியாகும். அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ள சூழலில், அவரது தொகுதியில் நேரடியாக சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிபிஎம் கட்சிக்கு தளி, திருத்துறப்பூண்டி, திருவில்லிப்புத்தூர், திருப்பூர் வடக்கு மற்றும் பவானிசாகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் 7 முதல் 8 தொகுதிகளில் வெற்றி உறுதி என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுகவின் கோட்டையாக இருந்த சில தொகுதிகளும் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+