கம்பம் தொகுதியில் களம் காண்பது யார்? திமுகவில் நடக்கும் மல்லுக்கட்டு!
தேனி: தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 2 சீனியர் நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவி வருவதால், இப்போதே அங்கு களம் பரபரப்பாக காணப்படுகிறது.
எல்லையோர தொகுதி
தேனி மாவட்டம் கம்பம் தொகுதியை பொறுத்தவரை தமிழக - கேரளா எல்லையோரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஒரு தொகுதியாகும். செழிப்பான விவசாய நிலங்களை உள்ளடக்கிய கம்பம் தொகுதியில் இஸ்லாமியர்கள், பிறமலைக்கள்ளர்கள், ஒக்கலிக கவுண்டர்கள் என பல்வேறு தரப்பினர் வசித்து வருகின்றனர்.

2 சீனியர்கள்
இந்நிலையில் இந்த தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.வும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணன் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறாராம். இதனிடையே இவருக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில் மற்றொரு சீனியர் நிர்வாகியான ஜெயக்குமார், கம்பத்தில் களம் காண களப்பணிகளையே தொடங்கிவிட்டாராம்.
கடந்தமுறையே ஜெயக்குமாருக்கு தான் எம்.எல்.ஏ. சீட் என்று பேசப்பட்ட நிலையில் இறுதிக்கட்டத்தில் பல்வேறு சோர்ஸ்கள் மூலம் தலைமையை அணுகி கம்பம் ராமகிருஷ்ணன் சீட் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த முறை எப்படியும் எம்.எல்.ஏ. சீட் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் ஜெயக்குமார் டீம் பம்பரமாக சுழலத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருணாநிதி காலம்
கம்பம் ராமகிருஷ்ணனை பொறுத்தவரை 2011 முதல் 2021 வரை மூன்று முறை கம்பம் தொகுதியில் தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகிறார். அதில் ஒரு முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜக்கையனிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார். இந்த 2 சீனியர் நிர்வாகிகளுக்கு மத்தியில் தங்க தமிழ்செல்வன் மகனுக்கும் தொகுதியின் மீது ஒரு கண் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே கருணாநிதி காலத்திலேயே திமுகவில் தேனி மாவட்ட பொறுப்பாளராக ஜெயக்குமார் இருந்தார் என்பது அவருக்கான ப்ளஸ் பாயிண்டாக கருதப்படுகிறது.
- அர்ஷத் கான்
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்!












Click it and Unblock the Notifications