சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேட்டுவ கவுண்டர்களின் புதிய திராவிட கழகம் உட்பட 50 இயக்கங்கள் - சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

Google Oneindia Tamil News

சென்னை: வேட்டுவ கவுண்டர்களின் புதிய திராவிட கழகம் உள்ளிட்ட 50 இயக்கங்கள், சங்கங்கள் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மக்கள் விடுதலை கட்சி, பார்வார்டு பிளாக் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Tamilnadu Assembly Election: 50 Movements, Assosiciations support to DMK Alliance

இந்த கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தி.மு.க. கூட்டணி நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்து ஆதரவு தெரிவித்துள்ளன.

இவை அல்லாமல் கொங்கு மண்டலத்தின் முக்கிய ஜாதியினராகிய வேட்டுவ கவுண்டர்களின் கே.எஸ். ராஜ்கவுண்டர் தலைமையிலான புதிய திராவிட கழகம் உள்ளிட்ட 50 இயக்கங்கள், சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் இயக்கங்கள்- சங்கங்கள்:

1. பட்டியலின விடுதலை பேரவை (நிறுவனர் / தலைவர் தலித் கே. ஆனந்தராஜ்)
2. தமிழ்நாடு பறையர்கள் அமைப்பு (துரை மனோஜ், திருச்சி மாவட்ட பறையர் குழு)
3. அனைத்து வன்னியர் நலப் பேரவை (நிறுவனர் டாக்டர் டி. தமிழ்செல்வன்)
4. தமிழ் மாநில முன்னேற்றக் கழகம் (நிறுவனர் - தலைவர் மரு. ச.அ. அன்பினுருவன்)
5. தமிழ்நாடு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மக்கள் இயக்கம் ( மாநில தலைவர் ஆர். ரமேஷ்குமார்)
6. தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் (மாநில பொதுச் செயலாளர் தா. இராசேந்திரன்)
7. உழைக்கும் விவசாயிகள் இயக்கம் (மாநில அமைப்பாளர் எஸ். சுந்தர்)
8. காமராஜர் தேசிய மக்கள் இயக்கம் (தலைவர் டி. செல்வம்)
9. பூவை மூர்த்தியார் மக்கள் பேரவை (அமைப்பாளர் புழல். மு. ஜெயசீலன்)
10. தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பு (மாநில தலைவர் எ. வெங்கடேஷ்
)11. புதிய திராவிட கழகம் (நிறுவனர் - தலைவர் கே.எஸ். ராஜ்கவுண்டர்)
12. தன்னார்வ நுகர்வோர் பொதுநல பாதுகாப்பு மையம் (செயலாளர் கே. நந்தகோபால்)
13. தலித் விடுதலை இயக்கம் - தமிழ்நாடு (மாநில பொதுச் செயலாளர் ச. கருப்பையா)
14. மருதநாட்டு மக்கள் கட்சி (நிறுவனர் - தலைவர் பனை. இராஜ்குமார்)
15. அனைத்து மக்கள் கட்சி (நிறுவனத் தலைவர் டாக்டர் எம். நஜ்மா அலி)
16.தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர் நலச்சங்கம் (மாநில பொதுச் செயலாளர் டாக்டர் வி.கே. அருணகிரி)
17. சென்னை மறைமாவட்ட பெந்தெகொஸ்தே சபைகள் ஐக்கியம் (நிறுவனர்- தலைவர் பாஸ்டர் பைபிள் பிலிப்)

Tamilnadu Assembly Election: 50 Movements, Assosiciations support to DMK Alliance

18. தேசிய திராவிட கட்சி (நிறுவனத் தலைவர் இராசிபுரம் டி.கே. முருகேசன்)
19. ஒருங்கிணைந்த இந்தியக் குடியரசு கட்சி (மாநில பொதுச் செயலாளர் எஸ். குணசேகரன்)
20. கல்வி ஆலோசகர்கள் நலச் சங்கம் (நிறுவனர் / தலைவர் ம. ஆறுமுகம்)
21. பார்வார்டு பிளாக் (சந்தனதேவர் பிரிவு) - (மாநில பொதுச் செயலாளர் பி.எஸ். ஜெயராம்)
22. தேசிய கொங்கு இளைஞர் பேரவை (நிறுவன அமைப்பாளர் கரு. மதிவாணன்)
23. திராவிட முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமிழ்நாடு மாநில தலைவர் ஜி.எஸ். இக்பால்)
24. தமிழ் மாநில தேசிய லீக் (பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப்)
25. இந்திய தேசிய லீக் (அப்துல் லத்தீப் பிரிவு) - (மாநிலத் தலைவர் ஆர்.பி. முஹம்மது ஹுசைன்)
26. உலக வேளாளர் சங்கம் (ஆலோசகர் டாக்டர் கு.பா. இரவீந்திரன்)
27. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (நிறுவனர், தலைவர் த. கார்வேந்தன்)
28. தமிழக அனைத்து மக்கள் கட்சி (மாநில தலைவர் எஸ்.ஆர். அம்பேத்கர்வழியன்)
29. தமிழ்நாடு தனிதிராவிடர் பேரவை (தலைவர் ஒளிபெரியசாமி)
30. காமராஜர் மக்கள் கட்சி (மாநில ஒருங்கிணைப்பாளர் ச. மணிகண்டன்)
31. புதிய தலைமுறை கட்சி (நிறுவனத் தலைவர் கி. ராஜா)
32. இந்திய நாட்டுப்பற்றுக் கழகம் (தலைவர் ராஜ ரிஷி குருதேவ்)
33. மறைந்த தலைவர்கள் கழகம் (தேசிய நிறுவனர் / பொதுச் செயலாளர் தே. பாபு)
34. செங்குந்தர் அரசியல் அதிகாரம் (தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்எஸ்ஆர். சரவணவேல்)
35. அனைத்து அருந்ததிய மக்கள் நலசங்கம் (நிறுவனர் - பொதுச் செயலாளர் மரு. துரை. பாலகுரு)
36. தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் (மாநிலத் தலைவர் பி. ராஜேந்திரகுமார்)
37. முத்துக்குளித்துறை பேரவை (செயலாளர் ராஜா வாஸ்)
38. அனைத்திந்திய காமராஜர் காங்கிரஸ் கட்சி (நிறுவனத் தலைவர் சி. ராஜாசிங்)
39. தமிழக தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் (நிறுவனர் - மாநிலத் தலைவர் கோ.ச. தேவராஜன்)
40. இந்திய முஸ்லீம் ஜமாஅத் (மாநில அமைப்பாளர் ஐ.எம்.ஜெ. ரபீக்)
41. ஐந்திணை மக்கள் கட்சி (மாநிலச் செயலாளர் வை. தேவதாசு)
42. சமநீதி மக்கள் கட்சி (நிறுவனத் தலைவர் எஸ்.எஸ். பாலகிருஷ்ணன்)
43. கக்கன் கிங்மேக்கர் - காமராஜர் மக்கள் நலப் பேரவை (மாநிலத் தலைவர் பி. கணேசன்)
44. சிந்தனை சிற்பி சிங்காரவேலர் மீனவர் பேரவை (செயலாளர் ஆர். பிரசாத்)
45. தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் சமுதாய நல சங்கம் (மாநில பொதுச் செயலாளர்வை. பழனிசாமி)
46. உழைப்பாளி மக்கள் கட்சி (நிறுவனர் - தலைவர் ராமகோபால தண்டாள்வர்)
47. தென்னிந்திய பழங்குடி கூட்டமைப்பு (மாநிலத் தலைவர் கி. பழங்குடி பாலு)
48. அகில பாரத தொழிலாளர் கட்சி (நிறுவனத் தலைவர் சட்ட வீரவள்ளுவன்)
49. அட்சயா மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் (மாநிலத் தலைவர் எம் முகமது காசீம்)
50. அருந்ததி கட்சி (பொதுச் செயலாளர் பி. தேவேந்திர ராவ்

English summary
50 Movements, Assosiciations support to DMK Alliance in the Tamilnadu Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X