38 தொகுதிகள், 3 அமைச்சர்கள்.. திமுகவிடம் கேட்ட காங்கிரஸ்.. டெல்லிக்கு போனை போட்ட ஸ்டாலின்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தரப்பில் 38 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், அமைச்சரவையில் 3 துறைகள் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் முதல்வர் ஸ்டாலின் தரப்பு நேரடியாக டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தரப்பில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. அப்படி இல்லையென்றால் தவெகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் உள்ளேயே பேச்சுகள் எழுந்துவிட்டன.

ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர்களோ திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஆனால் பிரவீன் சக்ரவர்த்தி, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் தவெகவுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக காங்கிரஸ் தலைமை சார்பாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது.
அப்போது காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தரப்பில் 38 தொகுதிகளும், அமைச்சரவையில் 3 துறைகளும் ஒதுக்கப்பட வேண்டும் என்று கடிதம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்த்துவிட்டு ஸ்டாலின், திமுக தரப்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும் என்று பதில் அளித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த வாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் தொடர்பாக பேசப்பட்டிருக்கிறது. அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு ஸ்டாலின் செய்தி அனுப்பி இருக்கிறார். இதன்பின் காங்கிரஸ் நிர்வாகிகளை அனுசரித்து போக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது செல்வப்பெருந்தகை கூட, காங்கிரஸ் தலைமையுடன் திமுக பேசி வருகிறது என்று கூறி இருந்தார். இதன் காரணமாகவே கிரிஷ் சோடங்கர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தவெக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது வதந்தி என்று வெளிப்படையாக அறிவித்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் 28 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 தொகுதிகளில் வென்றது. ஆனால் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெல்வதற்கு காங்கிரஸ் வேட்பாளரே காரணம் என்றும் கூறப்பட்டது. இதனால் இம்முறை தொகுதி பங்கீட்டில் திமுக இறுக்கிபிடிக்கும் என்று தெரிகிறது.
-
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications