காலையிலேயே கடுப்பாக்கிய ரசிகர்.. கோபமாக போனை பிடுங்கிய அஜித்.. வாக்குப்பதிவு மையத்தில் நடந்தது என்ன?
சென்னை: திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் இன்று தனது ரசிகர்களிடம் கோபமாக நடந்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.
Recommended Video

தமிழ் திரையுலக பிரபலங்கள் அதிகாலையிலேயே வாக்களித்து வருகிறார்கள். சென்னை தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாக்களித்தார். டிகர் ரஜினி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

அஜித்
இன்று திருவான்மியூரில் முதல் ஆளாக வந்து நடிகர் அஜித் வாக்களித்தார். இவருடன் ஷாலினியும் வாக்களித்தார். ரசிகர்களையும், கூட்டத்தையும் தவிர்ப்பதற்காக அஜித் அதிகாலையிலேயே வந்து வாக்களித்து விட்டு சென்றார். ஆனாலும் அஜித் வந்ததை பார்த்து அங்கு இருந்த ரசிகர்கள் கூட்டமாக கூடினார்கள்.

கூட்டம்
இவர்களை தவிர்த்துவிட்டு அங்கிருந்து எப்படியாவது கிளம்பி செல்லலாம் என்று அஜித் முயன்றார். ஆனால் வாக்குசாவடி மையத்திற்கு உள்ளே செல்லும் முன் அஜித்தை சுற்றி அவரின் ரசிகர்கள் பலர் நின்றனர். அஜித்தை நெறுக்கிக்கொண்டு பலர் அவரின் அருகிலேயே நின்றனர்.

போலீஸ்
போலீஸ் இருந்தும் கூட இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது அஜித் அருகே இருந்த ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுக்க முயன்றார். இதை பார்த்ததும் கோபம் அடைந்த அஜித் அந்த ரசிகரின் செல்போனை பிடுங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.

கோபம்
அதன்பின் கோபமாக இருந்த அஜித் அருகில் இருந்த ரசிகர்களை கிளம்பி செல்லும்படி கூறினார். அஜித் பொது இடங்களில் இப்படி கோபமாக நடந்து கொண்டது இல்லை. இன்று அவர் நடந்து கொண்ட விதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications