"அதான் நானே சொல்லிட்டேனே".. குறுக்கிட்ட இபிஎஸ்ஸை சட்டென ஆப் செய்த ஸ்டாலின்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடந்த விவாதம் ஒன்றை குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையில் நடந்த விவாதம் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பல்வேறு திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பேசி வந்தனர். சில எம்எல்ஏக்கள் மானியக்கோரிக்கை மீது பதில் அளிக்காமல் வேறு விஷயங்களை பேசிய போது முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது குறுக்கிட்டு எல்லோரையும் மானியக்கோரிக்கை பற்றி மட்டுமே பேசுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.
தேவையின்றி சர்ச்சைகளை பற்றி பேச வேண்டாம், தேவையான கேள்விகளுக்கு பதில் மட்டும் அளியுங்கள் என்று அறிவுரை வழங்கினார். முன்பே சட்டசபையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் தேவையற்ற புகழாரத்தை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு முன் அவையில் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் யாராவது தன்னை புகழ்ந்து பேசினால் கூட அதை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்தார். சட்டசபை விவாதம் குறித்து பேசாமல் வேறு விஷயங்களை பற்றி பேசினால் நடவடிக்கை எடுப்பேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மீறல்
இந்த நிலையில் கும்பகோணம் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் நேற்று சட்டசபையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து பேசினார். அவரின் பெயரை குறிப்பிடாமல், முன்னாள் அமைச்சர் ஒருவர் எப்போதும் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை. ஸ்டாலின் வெற்றிபெறவே முடியாது. எனக்கு எதிராக ஸ்டாலின் ராயபுரத்தில் போட்டியிடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். முதல்வர் ஸ்டாலினுக்கு வெற்றிபெற வாய்ப்பே கிடையாது என்று சவால் விட்டார்.

ஆனால்
ஆனால் இப்போது அந்த அதிமுக உறுப்பினர் அவையிலே இல்லை. அவரை அவையில் தேடி பார்க்கிறேன். ஐட்ரீம்ஸ் மூர்த்தி அதே ராயபுரம் தொகுதியில் வென்று அவையில் இருக்கிறார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட அந்த அதிமுக தலைவர் அவையிலே காணவில்லை என்று ஜெயக்குமார் குறித்து குறிப்பிட்டார். இதை கேட்ட முதல்வர் ஸ்டாலின் முகத்தில் கொஞ்சம் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

திமுக
கும்பகோணம் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகனின் இந்த பேச்சை முதல்வர் ஸ்டாலின் பெரிதாக விரும்பவில்லை. இதனால் வேகமாக எழுந்து பதில் அளித்த முதல்வர், உறுப்பினர்கள் நேரம் கருதி மானியக்கோரிக்கை மீது மட்டுமே பேச வேண்டும். முன்பே இதை பற்றி கூறி இருக்கிறேன். மானிய கோரிக்கை பற்றி மட்டும் அவை உறுப்பினர்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று கண்டிப்புடன் கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி
இதையடுத்து எழுந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவையில் இல்லாத ஒருவரை பற்றி இங்கே விவாதம் செய்கிறார்கள். அவையில் இல்லாத ஒருவரை பற்றி எப்படி புகார் வைக்கலாம். அப்படி என்றால் நானும் பழைய விஷயங்கள் பற்றி இங்கே பேசலாமா? பழைய விஷயங்களை எடுக்கலாமா என்று கேட்டார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

பதிலடி
உடனே எழுந்த முதல்வர் ஸ்டாலின், எல்லோரும் மானியக்கோரிக்கை மீது மட்டுமே பேச வேண்டும். நேரத்தை வீணாக்க கூடாது என்று நானே சொல்லிவிட்டேன். நானே உறுப்பினர்களுக்கு சொல்லிவிட்டேனே.. இன்னும் நீங்கள் அதை பற்றி பேச வேண்டும் என்றால் நாங்களும் அதை பற்றி பேசுவோம்.. என்று குறிப்பிட்டு விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications