நயினார் நாகேந்திரன் வைத்த ஒரு கோரிக்கை.. மொத்த அவையே சிரிக்க! அப்பாவு அடித்த பரபர கமெண்ட்! பின்னணி!
சென்னை: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இன்று சட்டசபையில் வைத்த கோரிக்கை ஒன்று அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டசபையில் விதி 110-ன்கீழ், முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பேசினார். இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக அவர் அளித்த அறிக்கையில், குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, மார்ச் 22, நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மீண்டும் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி நாளாக மீண்டும் கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வரவேற்றனர்.

நயினார் நாகேந்திரன்
இதையடுத்து பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், கிராம்சபை கூட்டம் நடத்தும் முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். உள்ளாட்சி அமைப்புகளை வலு சேர்க்கும் வகையில் அவரின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் பார்வை ஊராட்சி அமைப்புகள், பஞ்சாயத்து தலைவர்கள், சேர்மன் வரை வந்துள்ளது. ஆனால் சட்டசபை உறுப்பினர்களின் பக்கம் முதல்வரின் பார்வை வரவில்லை.

கார் வேண்டும்
எம்எல்ஏக்கள் பக்கமும் முதல்வர் ஸ்டாலினின் பார்வை திரும்ப வேண்டும். எதிர்க்கட்சிகள் பக்கமும் சரி.. ஆளும் கட்சிகள் பக்கமும் சரி.. இதே கருத்து நிலவுகிறது. எம்எல்ஏக்கள் பக்கமும் முதல்வரின் பார்வை பட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். எனக்கு என்று இல்லை.. தேவைப்படும் எம்எல்ஏக்களுக்கு நீங்கள் கார் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்.

நயினார் நாகேந்திரன் பேச்சு
அதை சிந்தித்து பார்க்க வேண்டும். இது என் வேண்டுகோள் என்று குறிப்பிட்டார். இதை கேட்டதும் அவையில் அதிமுக,பாமக, திமுக எம்எல்ஏக்கள் சிரித்தனர். முதல்வர் ஸ்டாலினும் சிரித்தார். தொடர்ந்து பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், அதே சமயத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கொடுக்கும் அதே வேளையில், ஊராட்சி மன்ற தலைவர்கள், நிர்வாகிகள் வைக்கும் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சி தலைவர்கள் பின்பற்ற வேண்டும்.

ஆட்சி தலைவர்கள்
இதற்கு ஆட்சி தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஊராட்சி தலைவர்கள் சிறப்பாக செயல்பட முடியும். ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பணிகளை செய்ய நிதி தேவைப்படுகிறது. இதற்கு நிதி கொடுக்க வேண்டும். அதேபோல் எல்லா சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பிலோ அல்லது வட்டி இல்லாத கடன் கொடுத்தோ கார் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசினார்.

அப்பாவு சிரிப்பு
இதை கேட்ட சபாநாயகர் அப்பாவு, மத்திய அரசிடம் கேட்டு பணம் தர ரெடி பண்ணுங்க. மத்திய அரசிடம் பரிந்துரை செய்து பணம் வாங்கி கொடுத்துவிடுங்கள்.. நன்றாக இருக்கும் என்று சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். அவர் சிரித்தபடியே சொல்ல முதல்வர் ஸ்டாலின் இதை கேட்டு சிரித்தார். அதிமுக நிர்வாகிகளும் இதை கேட்டு சிரித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications