விருதுநகரில் ராதிகா சரத்குமார், திருப்பூரில் முருகானந்தம்! தமிழக பாஜக 2ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல்
சென்னை: தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் நேற்றைய தினம் 7 தொகுதிகளுக்கும் இன்று 13 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.

இதில் பாஜக கூட்டணியில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், அமமுக, பாமக உள்ளிட்டவை கூட்டணி அமைத்திருந்தன.
இதில் பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும் , புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில் பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் நேற்று வெளியானது. அதில் தென்சென்னை - தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - நரசிம்மன், நீலகிரி (தனி) - எல்.முருகன், கோவை - அண்ணாமலை, நெல்லை - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி-பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - ஏ.சி.சண்முகம், பெரம்பலூர்-பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில், தாமரை சின்னத்தில் 4 கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் 24 தொகுதிகளில் தாமரை சின்னத்திலும், 15 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் அவர்களது சின்னத் திலும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில்,
சிவகங்கை தொகுதியில் தேவநாதன்,
மதுரை- ராம சீனிவாசன்,
நாகப்பட்டினம்- ரமேஷ்,
திருவண்ணாமலை- அஸ்வத்தாமன்,
வடசென்னை- பால் கனகராஜ்,
நாமக்கல்- கேபி ராமலிங்கரம்,
திருப்பூர்- ஏபி முருகானந்தம்,
பொள்ளாச்சி- வசந்தராஜன்,
சிதம்பரம்- கார்த்தியாயினி
தென்காசி- ஜான் பாண்டியன்
விருதுநகர்- ராதிகா சரத்குமார், உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications