Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சியில் கிராமமே வக்பு வாரியத்திற்கு சொந்தமா? சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?பாஜக அண்ணாமலை பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சியில் திருச்செந்தூர் என்ற கிராமமே தங்களுக்குச் சொந்தம் என்று வக்பு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருச்சியில் திருச்செந்துறை என்ற கிராமம் ஒட்டுமொத்தமாக வக்பு வாரியத்திற்குச் சொந்தம் என்று சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சுற்றறிக்கை காரணமாக அங்கு வசிக்கும் மக்களால் வீடுகளை வாங்கவும் விற்கவும் முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 அண்ணாமலை

அண்ணாமலை

அதில் அவர், "திருச்சிராப்பள்ளி மாவட்டம், முள்ளிக்கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால், திருச்செந்துறை கிராமத்தில் உள்ள அவரது 1 ஏக்கர் 2 சென்ட் விவசாய நிலத்தை ராஜராஜேஸ்வரிக்கு விற்பதற்காக இணை III துணை-பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்ற போது, அவரின் நிலம் உட்பட கிராமத்தில் உள்ள 389 ஏக்கர் நிலத்தை விற்கத் தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் (NOC) பெற வேண்டும் என்று கூறியதாகவும், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எழுதிய 11.08.2022 தேதியிட்ட கடிதத்தைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

 வக்பு வாரியம்

வக்பு வாரியம்

1954ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி பெற்றுள்ளதாகக் கூறப்படும் இந்த நிலத்தைப் பற்றி தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திருச்சிராப்பள்ளியில் உள்ள அனைத்து துணை-பதிவாளர்களுக்கும் 11.08.2022 தேதியிட்ட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறுவது என்னவென்றால், வக்பு வாரியத்திற்குச் சொந்தமான சொத்துக்களை விற்க, பரிமாற்றம் செய்ய, அடைமானம் வைக்க வக்பு வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் (NOC) பெற வேண்டும் என்று 1995ஆம் ஆண்டு வக்பு சட்டத்தை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.

 நடவடிக்கை

நடவடிக்கை

இந்த விவகாரத்தைப் பற்றி மேலதிகாரிகளிடம் ஆலோசிக்காமல், இந்த கடிதத்தின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்ட அலுவலர் (DRO) ஒரு உத்தரவைப் பிறப்பித்து ராஜகோபால் அவர்களிடம் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதைக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்றபோது, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.

 நிர்ப்பந்தம் இல்லை

நிர்ப்பந்தம் இல்லை

இதற்கு மேலாக, அண்மையில் கிராம மக்கள் மற்றும் வக்பு வாரியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட வருவாய் கோட்ட அலுவலர் (DRO) நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், இரு தரப்பினரின் முன்னிலையில், இந்த விவகாரத்தில் வேறேதேனும் உத்தரவை அரசு பிறப்பிக்கும் வரை, நிலங்களை விற்கவோ, வாங்கவோ எந்த வித நிர்ப்பந்தமும் இல்லை என்பதை எடுத்துரைத்துள்ளனர்.

 சட்டம் சொல்வது என்ன

சட்டம் சொல்வது என்ன

இந்தக் குழப்பம் எழுவதற்கு ஒரே காரணம் தமிழக அரசின் கவனக்குறைவும் மெத்தனப் போக்கும் மட்டுமே. இந்த நிலம் ராணி மங்கம்மாளின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு இனாமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1963ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த இனாம் நிலங்களை வருவாய் நிலங்களாக மாற்றும் சட்டத்தில் மூன்றாம் பாகத்தில், இனாம் நிலங்களில் எவரேனும் குடியிருந்தால் அது வருவாய் நிலங்களாக மாற்றப்பட்டு பட்டா வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருதரப்பினரிடமும் ஆவணங்கள் பெற்று, அதை ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்து பிறகு அரசு அலுவலர்கள் ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்.

சமரசம்

சமரசம்

இவற்றைச் செய்யத் தவறியதன் விளைவே இந்த குழப்பத்திற்குக் காரணம். திருச்செந்துறை பிரச்சினை இரு மதத்தினர் இடையே உள்ள பிரச்சினையாக மாறாமல் இரு தரப்பினரும் சமரசமான தீர்வை அடைய மத்திய வக்பு வாரியத்தின் கல்வி மற்றும் பெண்கள் குழுவின் தலைவர், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முனாவாரி பேகம் இரு தரப்பு மக்களிடம் பேசி இந்த பிரச்சினைக்கு ஒரு சுமுக தீர்வைக் காணப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+