"செல்லாது.. செல்லாது.." புதிய நிர்வாகிகளை நியமித்த காயத்ரி ரகுராம்! அதிரடியாக ரத்து செய்த அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக காயத்ரி ரகுராமின் அறிவிப்பு செல்லாது என்றும் பாஜகவின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு அணிகள் உள்ள நிலையில், அதில் கலை மற்றும் கலாசார பிரிவின் தலைவராக காயத்ரி ரகுராம் உள்ளார்,

2002ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இதுவரை பல படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

 காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

கடந்த பிப், 1ஆம் தேதி காயத்ரி ரகுராம் நிர்வாகிகளை மாற்றுவது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். காயத்ரி ரகுராமின் லெட்டர் பேடில் வெளியிடப்பட்டிருந்த அந்த அறிவிப்பில், பாஜகவுக்கும் கட்சியின் கலை மற்றும் கலாசார பிரிவுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட கலாசார பிரிவில் இருந்து சில மாநிலச் செயலாளர்களை நீக்குவதாக அவர் தெரிவித்திருந்தார்.

 புதிய நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகள்

மேலும், புதிதாக எட்டு பேரை கலாசார பிரிவின் மாநிலச் செயலாளர்களாக நியமிப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். இது நீண்ட காலமாகக் கிடப்பில் இருந்தாதகவும் இதை மாற்றுவதன் மூலம் தான் முழு பொறுப்பை எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், பொதுச் செயலாளர் ஜிகே செல்வகுமார் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார் என்பதால், மாநில தலைவர் அண்ணாமலை எனது முடிவுக்கு ஆதரவாக இருப்பார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 செல்லாது

செல்லாது

மாநில அளவில் நிர்வாகிகளை மாற்றுவது தொடர்பான முடிவுகளுக்குத் தேசிய தலைமையின் ஒப்புதல் தேவை என்று விதி உள்ள நிலையில், காயத்ரி ரகுராம் தன்னிச்சையாகக் கலை மற்றும் கலாசார பிரிவு நிர்வாகிகளை மாற்றியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காயத்ரி ரகுராமின் இந்த அறிவிப்பு செல்லாது என்றும் பழைய நிர்வாகிகளே தங்கள் பதவியில் தொடர்வார்கள் என்றும் பாஜகவின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.

 கரு.நாகராஜன் அறிவிப்பு

கரு.நாகராஜன் அறிவிப்பு

இது தொடர்பாகக் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "01.02.2022 அன்று கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம், அந்த பிரிவின் நிர்வாகிகள் மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டபடி இல்லாமல், கலை மற்றும் கலாச்சார பிரிவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிர்வாகிகள், அதே பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி தெரிவிக்கப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

 கட்டுப்படுகிறேன்

கட்டுப்படுகிறேன்

இந்த இரண்டு அறிவிப்புகளையும் காயத்ரி ரகுராமே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், அண்ணாமலையின் முடிவுக்குத் தான் கட்டுப்படுவதாகவும் தனக்கு ஆதரவு அளித்தற்கு நன்றி என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார். கட்சி நிர்வாகிகளை மாற்றுவது தொடர்பாக இப்படி அடுத்தடுத்து வெளியாகியுள்ள அறிவிப்புகள் பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+