• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இலக்கு இல்லாமல் தடுமாறும் திமுக அரசு! மோடியின் நல்லாட்சியால் மக்கள் மனதில் மாற்றம்!" அண்ணாமலை பளீச்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் மக்களின் மனங்களில் மாற்றம் வந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

  Rajini சொன்ன மாதிரியே Annamalai -யும் சொல்றாரே!

  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சி அமைந்து, மே மாதத்துடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

  தமிழ்நாட்டிலும் மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

  பாஜக பெரிய மண் குதிரை.. கேப்டன் இல்லாத கப்பலாக தள்ளாடும் அதிமுக.. அமைச்சர் மனோ தங்கராஜ் விளாசல் பாஜக பெரிய மண் குதிரை.. கேப்டன் இல்லாத கப்பலாக தள்ளாடும் அதிமுக.. அமைச்சர் மனோ தங்கராஜ் விளாசல்

   அண்ணாமலை

  அண்ணாமலை

  அதன்படி பாஜக அரசின் சாதனைகளை விளக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இதற்கிடையே இது குறித்து அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "கடந்த ஒரு மாதமாகத் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும் ஒரு சுற்று வந்த அனுபவத்தில் நான் கண்டு கேட்டு உணர்ந்து பல உண்மைகளை உங்களுடன் பகிர்கிறேன்.

   மௌனப் புரட்சி

  மௌனப் புரட்சி

  பாரத பிரதமர் நரேந்திர மோடி மோடியின் நல்லாட்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. திருவாரூரில் தொடங்கி மௌனப் புரட்சி வரிசையாக எல்லா மாவட்ட கூட்டங்களிலும் எதிரொலித்தது. மக்களின் எழுச்சியும் தானாக வந்து காட்டிய ஆதரவும் மிக மகிழ்ச்சியான செய்தி. மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசின் எட்டாண்டு சாதனைகளை எடுத்துரைக்க நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் ஆர்ப்பரித்தது.

   தூய்மையான ஆட்சி

  தூய்மையான ஆட்சி

  ஒரு நடுநிலையான உறுதியான மக்கள் நலன் காக்கும் நல்லாட்சிக்கு விளம்பரம் தேவையில்லை. மக்களின் விழிகளே விளம்பரங்கள்.. உள்ளம் உள்ளமே உத்தரவாதம்.. அவர்களின் ஆதரவு நற்சான்று! ஆட்சியில் அமர்ந்து ஓராண்டிற்குள்ளாக நமது தமிழகத்தில் மாநில அரசு தொடர்ச்சியாக எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டில் சிக்கித் தவிக்கிறது. ஆனால் சுட்டிக்காட்ட ஒரு சுணக்கமும் இல்லாமல் சுத்தமான மக்கள் சேவையை சுடர்மிகு நேர்மையுடன் நம் பாரதப் பிரதமர் ஒரு தூய்மையான ஆட்சியை எட்டு ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறார்

   மக்கள் கூட்டம்

  மக்கள் கூட்டம்

  எந்த ஒரு கட்சியின் பொது நிகழ்ச்சிக்கும் அதற்கு வரும் மக்கள் கூட்டம் மட்டுமே அளவுகோல் அளவுகள் ஆகாது என்பதை நான் தெளிவாக உணர்ந்து இருக்கிறேன். ஆனால் பணம் கொடுக்காமல், பொருள் வாங்காமல், உணவு உள்ளிட்ட தேவைகளை எதிர்பார்க்காமல் ஏராளமான மக்கள் தாமாக முன்வந்து பாரத பிரதமரின் நல்லாட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்..

   மாற்றம்

  மாற்றம்

  மக்கள் நலம் காக்கும் மகத்தான திட்டங்களை மத்திய அரசு அளித்து வருகிறது. ஆனால் மாநில அரசு இலக்கு இல்லாமல் தடுமாறுகிறது. இதன் காரணமாக மக்களுக்கு மனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

  English summary
  Annamalai says tamilnadu people are praising PM Modi's good governance: (பிரதமர் மோடி ஆட்சி குறித்து அண்ணாமலை) Annamalai latest about DMK rule.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X