அக்.31ல் பாஜக அறிவித்த பந்த் ஒத்திவைப்பு.. அதே நாளில் கோவை செல்லும் அண்ணாமலை.. காரணம் என்ன?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் கோட்டை ஈஸ்வரன் கோவில் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக குற்றச்சாட்டு
இதனிடையே கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை தமிழக அரசு என்ஐஏ மாற்றி பரிந்துரை செய்தது. இதன்பின்னர் வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கார் வெடிப்பு விவகாரத்தை பாஜக தலைவர்கள், தற்கொலைப் படை தாக்குதல் என்று கூறி வருகின்றனர்.

முழு அடைப்பு ஒத்திவைப்பு
அதுமட்டுமல்லாமல் அக்.31ல் முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்பின்னர் அக்.31ல் நடைபெறுவதாக இருந்த முழு அடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கோவை மாநகர மாவட்ட பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்.31ல் கோவை மாவட்டம் பயணிக்க உள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அண்ணாமலை ட்வீட்
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால். கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ம் தேதி நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

காரணம் என்ன?
கோவையில் அக்.31ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதே நாளில் மாநில தலைவர் அண்ணாமலை பயணம் மேற்கொள்ள உள்ளார். முழு அடைப்புக்கு பதிலாக பாஜக தரப்பில் கோயிலில் தரிசனம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications