ஜெ., வழியில் ஏழை மக்களுக்காக ஆட்சி நடத்தும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து.. தமிழிசை ட்விட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். முதல்வர் பழனிசாமி இன்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு பல்வேறு தலைவர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்வர் பழனிசாமிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tamilnadu bjp leader Tamilisai Soundararajan birthday wishes to CM edapadi palaniswami

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முதல்வருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன்,உடல் நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிராத்திப்பதாக கூறியுள்ளார்.


இந்த தேர்தல் வெற்றியோடு இன்னும் பல வெற்றிகளை பெற்று மக்கள் தொண்டாற்ற, முதல்வரை வாழ்த்துவதாக கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் முதல்வர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் வழியில், சாமானிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி ஏழை,எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி வரும் தமிழக முதல்வர் அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+