அச்சச்சோ.. "அலப்பறை" தாங்கல.. அறிவாலயம் மானமே போகுது.. செந்தில் பாலாஜி கைது நாடகம்.. ஓடோடி வந்த பாஜக
சென்னை: ஆளுங்கட்சி இருக்கும் சூழலிலேயே அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்.. அதுவும் மிக மிக முக்கியமான அமைச்சர்.. அதுவும், முதல்வரின் நேரடி நன்மதிப்பை பெற்ற அமைச்சர் கைது செய்யப்படுவது மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
குற்றச்சாட்டு சம்பவம் என்னவோ அதிமுக ஆட்சியில் நடந்ததாக இருந்தாலும், விசாரணை சம்பவம் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருப்பது அதைவிட விசித்திரமாக இருந்து வருகிறது. திடுதிப்பென்று தலைமை செயலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தியது, அதைவிட ஆச்சரியத்தை தந்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகார், ரெய்டு, கைது, சிகிச்சை என நீண்டு வருகிறது..
முக்கிய குறி: திமுக ஆட்சி அமைந்ததுமே, மேலிடத்தால் "கட்டம்" கட்டப்பட்டுவிட்டதாக செந்தில் பாலாஜி மீது தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.. மற்றொருபக்கம், சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்தபடியே வந்தார்.. இதற்கு நடுவில் திமுகவுக்குள்ளேயும், சில பொருமல்கள் செந்தில் பாலாஜி மீது எழத்தான் செய்தது.. மொத்தத்தையும் நாலாபக்கமும் சமாளித்து மேலேழுந்தவந்தநிலையில்தான், "முகாந்திரம் இருந்தால் முதலில் இருந்து வழக்கை விசாரிக்கலாம்" என்று சுப்ரீம்கோர்ட் செக் வைத்தது.
கிணற்றில் போட்ட கல்: செந்தில்பாலாஜிக்கு இங்கிருந்துதான் பிடி இறுக தொடங்கியது.. ரெய்டுகள் ஆரம்பமாகின.. கையில் கிடைத்த ஆதாரங்களை வைத்து கொண்டு, அடுத்தடுத்த அதிரடியில் இறங்கினர்.. வழக்கமாக தலைவர்கள் தரப்பில் ரெய்டுகள் நடந்தாலும், அதற்குபின் அந்த ரெய்டு விவகாரம் கிணற்றில் போட்ட கல்லாய் அமுங்கிவிடும்.. அப்படித்தான், அதிமுக மாஜி ரெய்டுகள் விவகாரத்திலும் நடந்தது.. ஆனால், செந்தில்பாலாஜி விவகாரத்தில், நேரடியாகவே குறிவைத்து அமலாக்கத்துறை களமிறங்கியது.
இன்று அதிகாலை கைது நடவடிக்கையில் இறங்கிய நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.. ஆனால், அமைச்சருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுவிடவும், உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. தொடர் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது..

காது பக்கம் வீக்கம்: ஆனால், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து வெளியாகும் தகவல்கள் எல்லாம் அதிர்ச்சி தந்து வருகின்றன.. மயக்க நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள்.. காது பக்கம் லேசாக வீக்கம் இருப்பதாக சொல்கிறார்கள்.. நான்கைந்து முறை கூப்பிட்டு பார்த்தும், அவர் கண் விழிக்கவில்லை என்கிறார்கள்.. அமைச்சர்கள் மருத்துவமனையிலேயே விழிப்பாய் இருக்கிறார்கள்.. ஒவ்வொருவராக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறார்கள். இதனால் தமிழகம் உட்பட திமுகவுக்குள்ளேயே ஒருவித பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.. இவைகளை எல்லாம் எதிர்க்கட்சிகளும் உற்றுகவனித்தபடியே உள்ளன.. அந்தவகையில், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, சில ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அவைகளில், நடந்து வரும் நிகழ்வுகளை கிண்டலடித்து உள்ளார்.. அத்துடன், முதல்வர் இந்த விஷயத்தில் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார். அந்த ட்வீட்கள் இதுதான்:
அறிவாலயம்: "செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டத்திற்குட்பட்டு நடந்து கொள்வது தான் நல்லது. இல்லையேல் அறிவாலயத்தில் மானம் சந்தி சிரிக்கும். அ.ராசா, கனிமொழி கைதுகளின் போது கூட இவ்வளவு அலப்பறை இருக்கவில்லை.ஆனால், இப்போது திமுக நடத்தும் நாடகம் வெட்கக்கேடானது.. திராவிட மாடல்.. திரைக்கதை, வசனம், நடிப்பு சுமார் தான். "அய்யோ அய்யய்யோ.. கொலை பண்ணுறாங்க..." என்ற காட்சி இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்" என்று அடுத்தடுத்த ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.
வெட்கமா இல்லை: இதைதவிர திருப்பதி நாராயணன், ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.. அதில், "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது செந்தில் பாலாஜியின் கடமை. வெட்கமாக இல்லை? போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சாதாரண மக்களிடம் லஞ்சம் வாங்கி ஏமாற்றிய ஒரு நபருக்கு இப்படிப்பட்ட ஒரு ஆதரவா? தலைகுனிய வேண்டிய சூழ்நிலையிலே தமிழகம் இருக்கிறது. முதலமைச்சர் அவர்களே, சட்டத்திற்குட்பட்டு, உங்களுடைய கட்சியினரை நடக்க வையுங்கள்.
செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து தூக்கி எறியுங்கள். அதுதான் திமுகவிற்கும், தமிழகத்திற்கும் நல்லது" என்று பேசியுள்ளார். இந்த வீடியோவைதான் பாஜகவினர் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications