ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் உறுதி.. பாஜகவின் நோக்கம் இதுதான்.. அண்ணாமலை கருத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதேபோல் மசோதாவை சட்டவிதிகளின்படி வலிமை உடையதாக்க வேண்டுமென்பதே பாஜகவின் நோக்கம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைனில் நடைபெறும் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. பல்வேறு நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களை சீர்குலைத்து வரும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

எங்களின் நோக்கம் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்ட விதிகளின்படி இன்னும் வலிமை உடையதாக்க வேண்டும் என்பது தானே தவிர அந்த மசோதாவையே தடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கப்படுத்தும் மசோதா 2022 இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகவும் மேலும் உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் முந்தைய தீர்ப்புகளுக்கும் முரணாக உள்ளது.

சட்ட அடிப்படையில் உருவாக்குக

சட்ட அடிப்படையில் உருவாக்குக

இணைய வழியில் நடைபெறும் திறமை அடிப்படையிலான விளையாட்டுகள் மீது தடை விதிக்க மாநில சட்டமன்றத்திற்கு தகுதி உரிமை இல்லை என்று நீதிமன்றங்கள் பலமுறை கூறி இருப்பதை தமிழக அரசு கவனிக்க வேண்டும். அந்த தீர்ப்பின் 125, 126, 13 ஆகிய பத்திகள் கொடுக்கும் விளக்கங்கள் இந்த மசோதாவையும் செல்லுபடி ஆகாமல் செய்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இம்மசோதாவை இன்னும் ஆழமாக சிந்தித்து சட்டத்தின் அடிப்படையில் உருவாக்க வேண்டும்.

கவனம் தேவை

கவனம் தேவை

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் அவசரம் ஏதுமின்றி, ஆழமாக சிந்தித்து இம்மசோதாவை கவனமாகத் தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சென்னை நீதிமன்றம் கூறிய இதே கருத்தை கர்நாடக உயர்நீதிமன்றமும் ஆல் இந்தியா கேமிங் ஃபெடரேஷன் மற்றும் கர்நாடக மாநிலத்தின் தலைமைச் செயலாளர் SCC ஆன்லைன் கார் 435/2022 என்ற வழக்கிலே, மாநிலப் பட்டியல் பதிவு வரிசை 34 வரம்புக்குள் வரக்கூடிய விளையாட்டுகளை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

திறன் சார்ந்த விளையாட்டு

திறன் சார்ந்த விளையாட்டு

அதில் திறன் சார்ந்த விளையாட்டுகளை மாநில அரசு சட்டத்தின் மூலம் தடுக்க முடியாது என்பதை வலியுறுத்தி இருக்கிறது. இம்மசோதாவில் விளையாட்டுகளை திறன் மற்றும் வாய்ப்புகள் ஆகிய பிரிவின் அடிப்படையில் ஆராயாமல் "உயர்ந்த திறன்" "சூப்பர் லேட்டிவ் ஸ்கில்" என்ற புதிய தர நிலையை அதற்கான விளக்கங்கள் ஏதும் இன்றி அறிமுகப்படுத்துவதால், இம்மசோதா நீதிமன்றத்தின் விவாத பொருளாகிறது. திறன் அல்லது வாய்ப்பு என்ற விளையாட்டின் தன்மையில் எது அதிகம் என்று சந்தேகமின்றி தீர்மானிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

வாய்ப்பு விளையாட்டு

வாய்ப்பு விளையாட்டு

தடை செய்யப்படும் விளையாட்டை வாய்ப்பு விளையாட்டாக உருவகப்படுத்தினால் மட்டுமே அந்த விளையாட்டை அரசினால் தடை செய்ய முடியும். இந்த சட்ட முன் வடிவம், தமிழ்நாடு கேமிங் சட்டம் 1930ன் தொடர்ச்சியாக இல்லாமல் தன்னிச்சையான அவசர சட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாலும், அதன் சரத்துக்களில் திறன் சார்ந்த மற்றும் வாய்ப்பு விளையாட்டுக்களுக்கும் இடையே ஒரு செயற்கை வேறுபாட்டை உருவாக்குவதாலும் இம்மசோதா சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது.

தீர்ப்புக்கு முரணாக மசோதா

தீர்ப்புக்கு முரணாக மசோதா

ஆன்லைன் ரம்மி மற்றும் போக்கர் ஆகிய விளையாட்டை திறன் அடிப்படையிலான விளையாட்டாகவும், திறமையின் வெளிப்பாடாகவும் கருதி சென்னை உயர்நீதிமன்றம் ஜங்கிலி கேம்ஸ் வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக இந்த தடைச் சட்ட மசோதா அமைந்துள்ளது. ஆகவே இம் மசோதாவை நீதிமன்றம் ஏற்காது. ஆகவே இந்த மசோதாவை இதே நிலையில் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பாமல், சட்டமன்றத்தின் புனிதம், மற்றும் தமிழ்நாடு அரசின் பெருமைக்கு ஊறு ஏற்படாத வகையில், மீண்டும் நீதிமன்றத்தால் நிராகரிக்க முடியாத வகையில், சட்ட நுணுக்கங்களை பரிசீலித்த பின்னர் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.

 பாஜகவின் விருப்பம்

பாஜகவின் விருப்பம்

ஆன்லைன் விளையாட்டிற்கான இந்த தடை சட்டத்திற்கு தற்போது ஆளுநர் அனுமதி அளித்தாலும், மீண்டும் இந்தச் சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில், ஆன்லைன் நிறுவனங்களால் மனுக்கள் தாக்கல் செய்யப்படும். அப்போது கேரளா, கர்நாடக, உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த சட்டம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் ஆபத்து உள்ளது. இம்மசோதாவை மீண்டும் ஒருமுறை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படாத வகையிலே சட்டப்படி உறுதி செய்தபின்னர். இம்-மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் முன்னெடுக்க வேண்டும் என்றுதான் பாஜக விரும்புகிறது.

பாஜக நிலைப்பாடு

பாஜக நிலைப்பாடு

பாஜகவின் கருத்தை வலியுறுத்தி பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் இன்றைக்கு சட்டமன்றத்தில் பேசினார். இம் மசோதா மீதான விவாதத்தில் பாஜகவின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும். கலந்து கொண்டனர். எப்போதும் மக்களுக்காக போராடும் பாரதிய ஜனதா கட்சி, ஆன்லைனில் நடைபெறும் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது என்ற எங்கள் நிலைப்பாட்டை இப்போது மக்கள் மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+