தமிழ்நாட்டுக்கு மோடி எவ்ளோ செஞ்சிருக்கார்னு பாருங்க.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை! ஆஹா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

தமிழ்நாட்டிற்கு மத்திய பாஜக அரசு போதுமான திட்டங்களை நிறைவேற்றுவதில்லை என்றும் குறைவான நிதியே வழங்கப்படுகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பதில் அளித்தார். அப்போது, தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட ரூ.10.76 லட்சம் கோடி நிதிக்கான வெள்ளை அறிக்கை 24 மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

Tamilnadu bjp president Annamalai releases white paper on tn received 10 point 76 lakh crore fund

இந்நிலையில், இன்று மத்திய பாஜக அரசு, கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு நிறைவேற்றிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு போதுமான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Tamilnadu bjp president Annamalai releases white paper on tn received 10 point 76 lakh crore fund

முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது மிகப்பெரிய பொய் என்பதை தமிழக பாஜக சார்பாக வெள்ளை அறிக்கை மூலம் நிரூபிக்க விரும்புகிறோம். திமுகவின் அடையாளமே பொய்களும் மோசடியும்தான். மு.க.ஸ்டாலின் அவற்றில் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது மட்டுமே தெரிகிறது.

பிரதமர் மோடி தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில், தமிழகம் ரூ.10.76 லட்சம் கோடிக்கு மேல் பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், வரலாறு காணாத ஊழலால் தமிழ்நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதைத் தவிர வேறு என்ன கிடைத்தது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான போக்குவரத்து, ரயில்வே, சாலைப் போக்குவரத்து, கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு திட்டங்கள், அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+