ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு குட்பை.. இலங்கைக்கு அண்ணாமலை திடீர் பயணம்!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை செல்கிறார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெரும் களேபரங்களுக்கு நடுவே அதிமுகவின் தென்னரசு, இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இன்று ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தாம் இலங்கை பயணம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அந்நாட்டுக்கு செல்கிறார். இலங்கை அரசியல் கட்சிகளின் அழைப்பின் பேரில் நான் இலங்கைக்கு செல்கிறேன். இத்தகைய பயணங்களால் நமது இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தமக்கு பதில் மூத்த பாஜக தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
அத்துடன், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறைந்துள்ளன; இலங்கை- இந்தியா இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்றார் அண்ணாமலை.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென டெல்லி சென்ற அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது திடீரென இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அந்நாட்டு அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என ஜெய்சங்கரிடம் மனு கொடுத்தார் அண்ணாமலை.
முன்னதாக கடந்த ஆண்டும் அண்ணாமலை இலங்கை பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இலங்கையில் பல்வேறு தரப்பு அரசியல் தலைவர்களை அண்ணாமலை சந்தித்து பேசினார். அண்ணாமலையின் அந்த பயண கால கட்டத்தில், இலங்கையிடம் இருந்து இந்தியா கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அண்ணாமலையின் தற்போதைய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications