தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது? ஒரே நாளில் 3 அதிரடியா?.. "அந்த" 2 பேரும் திமுகவை அப்படி பேசினாங்களே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவில் இன்று மூன்று முக்கிய அதிரடிகளை அதன் தலைவர் அண்ணாமலை நிகழ்த்தியுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அன்றைய நாள் முதல் மூத்த பாஜக தலைவர்களை எந்த விஷயத்திலும் ஆலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. மூத்தவர்களுக்கு உரிய மரியாதையையும் கொடுப்பதில்லை என்றும் ஆதங்கம், புலம்பல்கள் கேட்கத்தான் செய்கின்றன.

இத்தனை ஆண்டுகாலமாக கட்சியில் இருந்தவர்களை விட்டுவிட்டு புதிதாக தமிழக பாஜகவிற்கு ஒரு தலைவரை கொண்டு வந்ததும் அவர்களிடையே ஒரு அங்கலாய்ப்பாக இருந்ததையும் மறுக்க முடியாது. தமிழக பாஜகவில் உள்கட்சி பிரச்சினை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உள்கட்சி பிரச்சினை

உள்கட்சி பிரச்சினை

பொதுவாக உள்கட்சி பிரச்சினை, கோஷ்டி பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் கட்சி பெயர் போனது என சொல்லலாம். இதற்கு உதாரணம் அண்மையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த கோஷ்டி மோதலே காரணம். அது போல் பாஜகவில் இருக்கும் மோதலும் தற்போது வெளியே வர தொடங்கிவிட்டது. இதை வளரவிடக் கூடாது என்பதற்காக அண்ணாமலை இன்றைய தினம் 3 முக்கிய அதிரடிகளை எடுத்துள்ளார்.

திருச்சி சிவா

திருச்சி சிவா

முதல் அதிரடி- திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சிவாவை பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். அவருக்கும் டெய்சி சரணுக்கும் இடையேயான உரையாடலில் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கைக்கு அளித்த உத்தரவிடப்பட்டுள்ளது. திமுகவில் தனக்கென அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் திருச்சி சிவா மகன் சூர்யா சிவா அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததாக தெரிகிறது. இணைந்த நாள் முதல் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

திமுக விமர்சனம்

திமுக விமர்சனம்

அது போல் காயத்ரி ரகுராம் கடந்த சில தினங்களாக அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டரில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். சில சேனல்களிலும் பேட்டி அளித்ததாகவும் தெரிகிறது. அண்ணாமலையின் டீம் தொடர்ந்து காயத்ரி ரகுராமை விமர்சனம் செய்ததால் அதற்கு அவர் பதிலடி கொடுத்து வந்தார். இதனால் டவிட்டர் களமே சூடாகியிருந்தது. தற்போது அவரை கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராமும் திமுகவினரை டிவிட்டரில் கடுமையாக விளாசி வந்தார். முதல்வரே! மிஸ்டர் திருமா என குறிப்பிட்டே சில விமர்சனங்களை முன் வைத்து வந்தார்.

யூடியூப் சேனல்

யூடியூப் சேனல்

அது போல் யூடியூப் சேனல்களில் பாஜக செய்தி தொடர்பாளர்கள் பேசுவதற்கும் அண்ணாமலை தடை விதித்துள்ளார். யூடியூப் சேனலில் தமிழக பாஜகவினர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி சொந்த கருத்துகளை முன்னிறுத்தி வருகிறார்கள். கூட்டணி கட்சிகள் குறித்தும் விமர்சனங்களை எடுத்து வைக்கிறார்கள். இதனால் பாஜக செய்தி தொடர்பாளர்கள் யாரும் அனுமதி கேட்காமல் நேர்காணலில் கலந்து கொள்ளக் கூடாது என அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது போல் இன்றைய தினம் அண்ணாமலை 3 அதிரடிகளை செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+