சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரியா மரணம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினின் பழைய 'ரத்தம் கொதிக்கிறது'ட்வீட்டை பகிர்ந்து தாக்கும் பாஜக!

Google Oneindia Tamil News

சென்னை: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பழைய ட்விட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்து தமிழக பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரியா மரணம் அடைந்தார். வீராங்கனை பிரியாவின் மரணம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தியது தமிழக அரசு. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிரியாவுக்கு காலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பிரியாவின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணம் என்பதால் இரு மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

ஈபிஎஸ் போட்ட கணக்கு.. முந்திக்கொண்ட முதல்வர்.. அதே ரூட் பிடிக்கும் எடப்பாடி.. 'லிஸ்ட்’ பறந்த ஆர்டர்! ஈபிஎஸ் போட்ட கணக்கு.. முந்திக்கொண்ட முதல்வர்.. அதே ரூட் பிடிக்கும் எடப்பாடி.. 'லிஸ்ட்’ பறந்த ஆர்டர்!

எதிர்க்கட்சிகள் கோரிக்கை

எதிர்க்கட்சிகள் கோரிக்கை

இந்த விவகாரத்தில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பிரியாவின் மரணத்துக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்; பிரியாவின் குடும்பத்துக்கு ரூ1 கோடி நட்ட இழப்பு வழங்க வேண்டும் எனவும் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாஜக பாய்ச்சல்

பாஜக பாய்ச்சல்

இந்நிலையில் 2018-ல் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தவறான ரத்தம் ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டதை மேற்கோள்காட்டி பாஜக தலைவர்கள், விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில், ரத்தம் கொதிக்கிறது. இந்த ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? என்று டிசம்பர் 26,2018 அன்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தவறுதலாக ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவாகரத்தில் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் @mkstalin அவர்கள் விமர்சித்திருந்தார்.

சொன்னது நீதானா சொல். சொல்..

சொன்னது நீதானா சொல். சொல்..


நேற்று, இன்றைய @CMOTamilnadu மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியா என்ற 17 வயது சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அந்த சிறுமியின் உயிர் பிரிந்து விட்டது. இப்போது ரத்தம் கொதிக்கவில்லையா திரு.ஸ்டாலின் அவர்களே? இது ஊழல் அரசு என்பதையும்,உங்கள் ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதை விட உதாரணம் வேண்டியதில்லை என்பதையும் ஒப்பு கொள்கிறீர்களா முதல்வர் அவர்களே? சொன்னது நீ தானா சொல் சொல் சொல்..... என பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை ட்வீட்

அண்ணாமலை ட்வீட்

இதேபோல முதல்வர் ஸ்டாலினின் பழைய ட்வீட்டை மேற்கோள்காட்டி பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் எழுதியுள்ளார். அதில், அரசு மருத்துவர்களின் தனியார் கிளினிக்குகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார் அண்ணாமலை.

English summary
Tamilnadu BJP leader Slammed CM MK Stalin in footballer Priya death row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X