நாளை சென்னை வருகிறார் மோடி! 50 ஆயிரம் தொண்டர்களை திரட்டி வரவேற்பு தரும் பாஜக! ஏற்பாடுகள் மும்முரம்!
சென்னை: நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க 50,000 தொண்டர்களை திரட்டுகிறது தமிழக பாஜக.
Recommended Video
பிரதமரை வரவேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர்.
சென்னை நேப்பியர் பாலம் முதல் நேரு ஸ்டேடியம் வரை 25 விதமான வரவேற்பு கொடுக்க தமிழக பாஜக ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

சென்னை வருகை
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் புதிய திட்டங்கள் மற்றும் ரயில்வே துறையின்புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை மாலை சென்னைவருகிறார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க
திமுகவினர் 2,000 பேருக்கும், பாஜகவினர் 2,000 பேருக்கும் பாஸ்கள்வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்
அதிகாரிகள், என 400 வி.ஐ.பி. பாஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.

சாலை வழியாக
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு வந்தடையும் பிரதமர் மோடி அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பயணித்து நேரு
உள் விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜகநிர்வாகிகள் செய்து வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பாஜக தொண்டர்களை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

25 விதமான வரவேற்பு
இதேபோல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும்,
நிர்வாகிகளும் சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி விழா
நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் 25 இடங்களில் 25 விதமான வரவேற்பு
கொடுக்க திட்டமிட்டுள்ளது பாஜக. அரசு விழா முடிந்ததும் தமிழக பாஜகபிரமுகர்கள் சிலருடன் மட்டும் பிரதமர் மோடி 10 நிமிடம் உரையாடுகிறார்.அதில் 4 பாஜக எம்.எல்.ஏ.க்களும் அடங்குவர் எனத் தெரிகிறது.

டெல்லி பயணம்
நாளை மாலை சென்னை வரும் பிரதமர் மோடி உடனடியாக ஒரு சில மணி நேரங்களில்
மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இதனிடையே சென்னை விமானநிலையத்தில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பாஜகமேல் மட்ட நிர்வாகிகள் ஆகியோர் பிரதமரை வரவேற்க உள்ளார்கள்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications