தமிழக பட்ஜெட் 2019: காவல்துறைக்கு ரூ.8,884 கோடி ஒதுக்கீடு.. அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழக காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக காவல்துறைக்கு 8,884.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக காவல்துறைக்கு 8,884.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டசபையில் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகளை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதன்படி
காவல்துறை நவீனமயமாக்கப்படும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். கணினி இணைப்பு திட்டத்தால், காவல்துறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை மிக சிறப்பாக செயல்படுகிறது. காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நவீனமயமாக்கும் திட்டம் உட்பட காவல்துறைக்கு 8,884.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒரு இலட்சம் வீடுகளுக்கு 1,700 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது.
கால்நடைத்துறைக்கு 1,252 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.பால்வளத்துறைக்கு 258 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மீன்வளத்துறைக்கு 927 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது, என்று நிதியமைச்சர் அறிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications