தமிழக பட்ஜெட் 2019: சென்னை மெட்ரோவிற்கு ரூ.2681 கோடி ஒதுக்கீடு.. ஓ.பி.எஸ் மாஸ் அறிவிப்பு!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தின்கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தின்கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெற்றது. அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்டத்தில் 45.01 கி.மீ தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் பிப்ரவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் நீடிக்க ஆய்வு செய்யப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தின்கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.
மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-கோயம்பேடு பஸ் நிலையம் வரை 52.01 கி.மீ நீளமுள்ள வழித்தடங்களில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும்.சென்னை மெட்ரோ ரயிலின் 2வது கட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ரயில் பாதை 172.81 கி.மீயாக அதிகரிக்கும்.
நடப்பு பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக ரூபாய் 2681 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது, என்று நிதியமைச்சர் அறிவித்து இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications