தமிழக பட்ஜெட் 2021-2022: ஸ்டாலின் அமைச்சரவையின் முதல் பட்ஜெட்!.. சுவாரஸ்ய தகவல்கள்
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக இ பட்ஜெட் இன்றைய தினம் தாக்கல் செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டும் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
2021- 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதன் சுவாரஸ்யங்கள் என்னென்ன என்பது பார்க்கலாம். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்கிறது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். திமுக அமைச்சரவை தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது.
கொரோனா பரவலால் இடநெருக்கடி காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தாராள இடம் தேவை என்பதால் கலைவாணர் அரங்கில் கடந்த ஆட்சி முதல் சட்டசபை கூட்டத் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சி கலைவாணர் அரங்கில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட்டை தற்போது திமுக அரசு தாக்கல் செய்கிறது. 20 ஆண்டுகள் கழித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இன்று தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்.
பட்ஜெட் என்ற சொல்லை அரசு சொல் கிடையாது. அரசு பயன்படுத்தும் சொல் ஆண்டு நிதி நிலை அறிக்கை எனும் சொல்லாகும். பட்ஜெட் என்பது பிரெஞ்சு சொல்லாகும். தோலால் செய்யப்பட்ட பர்ஸ் என்ற பவ்கெட் (BUVGET) தான் மருவி பட்ஜெட்டானது. ஆரம்பத்தில் தோலால் செய்யப்பட்ட பெட்டிகளில் வைத்து பட்ஜெட் ஆவணங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் தற்போது டிஜிட்டல் முறை வந்துவிட்டது.
தமிழகத்தை பொருத்தமட்டில் அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை செய்வார். அப்போது பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் எல்லாம் அதில் விவாதிக்கப்படும். மற்ற அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த விஷயங்களை நிதி அமைச்சருக்கு கூறுவர். அதை அடிப்படையாக வைத்து முதலில் பட்ஜெட் டிராப்ட் எனப்படும் வரைவை தமிழக நிதி துறை தயாரித்து அது முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்களுக்கும் கருத்து கேட்க அனுப்பி வைக்கப்படும்.
இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதை செய்து முதல்வருக்கு அனுப்பி வைப்பார்கள். இதுதான் இறுதியான பட்ஜெட்டாகும். இதை நேற்று முன் தினமே முதல்வர் ஸ்டாலின் இறுதி செய்துவிட்டார். தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications