மதுரை, கடலூரில் காலணி தொழில் பூங்கா; 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு.. தங்கம் தென்னரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை மற்றும் கடலூரில் ரூ.250 கோடியில் காலணி தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதன் மூலமாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். இன்னும் ஓராண்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திமுக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட் இதுதான். அதனால் அரசு ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிற்நுட்பம், கல்வி, மருத்துவம், கட்டமைப்பு என்று அனைத்து துறைகளிலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

tamil nadu budget 2025 tamil nadu budget 2025 2025

அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் தொழில் துறைக்கு மட்டும் ரூ.3,915 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் 398 ஏக்கரில் ரூ.266 கோடியில் 9 தொழிற்பேட்டைகள் மூலம் 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

அதன்படி காஞ்சிபுரம் - திருமுருவாக்கம், விழுப்புரம் - சாரம், நாயக்கனூர், கரூர் - நாகம்பள்ளி, திருச்சி - சூரியூர், மதுரை -கருத்தபுளியம்பட்டி, ராமநாதபுரம் - தனிச்சியம், தஞ்சை - நடுவூர், நெல்லை - நரசிங்கநல்லூரில் சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைகின்றன.அதேபோல் தோல் அல்லாத காலணி உற்பத்தியில் ஈடுட்டுள்ள உலகின் முன்னணி நிறுவனங்கள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில், விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கரூர், சேரம்பலூர், அரியலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

தோல் அல்லாத காலணி உற்பத்தித் தொழிற்சாலைகளின் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன், அவர்களில் 80% பேர் ஊரகப் பகுதிகயைச் சேர்ந்த பெண்களாகவே இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக வேலைபாய்ப்புகளை உருவாக்கும் இந்த துறையில் நாட்டிலேயே அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இந்த உற்பத்தி துறைகளில் இந்த ஆண்டு 10 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றும் வகையில் மதுரை மாவட்டம் மேலூரில் 10 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் கடலூரிலும் இரு காலணி தொழிற்பூங்காக்கள் ரூ.250 கோடி முதலீட்டில் அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலணி திறன் பயிற்சி மையம் ஒன்றை சிப்காட் நிறுவனம் நிறுவிடும்.

அதேபோல் மத்திய மண்டலத்தில் 5 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் திருச்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் வாகன உற்பத்தி துறைகளில் கணிசமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் செயற்கை இழை மற்றும் தொழிற்நுட்ப ஜவுளி தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+