இது லிஸ்ட்லயே இல்லையே.. தவெக பட்ஜெட்டில் தரமான சம்பவம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களாகிவிட்டது. எதிர்பார்த்த அறிவிப்புகள் குறைவாக தான் வந்துள்ளது. மறுபக்கம் வாக்களித்த மக்களை தவெக ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். தவெகவின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. விஜய்க்கு பணம் ஒரு விஷயமே இல்லை. இந்த பட்ஜெட்டில் இதுவரை இல்லாத புதிய பார்வையில் இருக்கும் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த சிஐஐ தொழில்துறை நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நம் முதலமைச்சர் இளைஞர்களுக்கான துறையை கைவசம் வைத்துள்ளார். இந்த பட்ஜெட் புதிய பார்வையில் இருக்கும். ஒவ்வொரு துறையும் புதிய இலக்கை நோக்கி பயணிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும். முன்னாடி எல்லாம் ஒரு மானிய கோரிக்கை என்றால் பேசியதையே பேசுவார்கள். கடந்த வருடம் என்ன பேசினார்களோ அதையே தான் பேசுவார்கள். கடந்த பட்ஜெட்களை அப்படியே கட் அண்ட் காப்பி செய்வார்கள்.

Aadhav Arjuna Budget


விளையாட்டு கட்டமைப்பு

என்ன அறிவித்தோம், என்ன செயல்படுத்தினோம் என்கிற தரவுகள் இருக்காது. பட்ஜெட்டில் நாம் என்ன அறிவிக்கிறோமோ ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவோம். ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அதை அடுத்த பட்ஜெட்டுக்குள் செயல்படுத்துவோம். தொழில்நிறுவனங்களை வரவேற்கிறோம். தொழில் செய்வதற்கு தமிழகம் மிகவும் பாதுகாப்பானது. சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும். பெண் உயர்கல்வி சிறப்பாக உள்ளது. சென்னை, கோவையில் வேலை, தொழிலில் பெண்கள் பங்களிப்பு அதிகம் உள்ளது.

தர்மபுரி, கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருநெல்வேலி போன்ற பல்வேறு பகுதிகளில் பெண்கள் உயர்கல்வி, வேலை, தொழில் பக்கம் வராமல் வீட்டில் முடங்கியுள்ளனர். அதற்கான உயர்கல்வி திட்டங்களை உருவாக்கி வருகிறோம். விளையாட்டு துறையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். விளையாட்டில் இந்தியாவுக்கு தமிழகம் தலைநகராக மாறும். அந்தளவுக்கு பெரிய கட்டமைப்பு தமிழகத்தில் உருவாக போகிறது.

அதிக சம்பளம் வாங்கியவர்

1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா நேரு ஸ்டேடியைம், வேளச்சேரி நீச்சல் குளம் போன்ற உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு கட்டமைப்புகளை ஏற்படுத்தினார். அது கோவை போன்ற மற்ற நகரங்களுக்கு செல்லவில்லை. பல நகரங்களில் போதிய விளையாட்டு கட்டமைப்பு இல்லை. எதிர்காலத்தில் தமிழகத்தில் ஒலிம்பிக் போட்டி நடத்துமளவுக்கு கட்டமைப்பை ஏற்படுதுவோம். அதற்கான முதலீடுகளை இப்போதிருந்தே ஈர்க்க வேண்டும். விழிப்புணர்வு திட்டங்கள், திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டி நடத்துவோம்.

எங்கள் முதலமைச்சர் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகர். அதை தூக்கி வீசிவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். விஜய்க்கு பணம் ஒரு பெரிய விஷயமே இல்லை. தேர்தலில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. மக்கள் பணம், ஜாதி பார்க்காமல் எங்களுக்கு வாக்களித்தனர். மக்கள் வளர்ச்சி, முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டனர். அதை மீறி யாராவது தவறு செய்தால் மக்களே தூக்கி வீசுவார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+