பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. 20 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி
சென்னை: தமிழக சட்டப் பேரவையில் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 160 நிமிடங்கள் உரையாற்றினார். 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்பதால் இது தேர்தலுக்கு முன்பான திமுக அரசின் முழு பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.47,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். ரூ.152 கோடியில் அமைக்கப்படும் இந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் 1,308 மாணவர்கள் பயனடைவார்கள். அதேபோல, சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் அறிவியல் மையம் அமைக்கப்படும். 10 லட்சம் வரையுள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1 சதவீதம் பதிவுக் கட்டணம் குறைக்கப்படும். மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.41,000 கோடியாகக் குறையும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையை அடைவோம் என்று அறிவித்தார்.
தொடர்ந்து, வரும் நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், மாநில அரசின் சொந்த வரி வருவாய் 14.6% அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவி மானியங்கள் ரூ.23,834 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.46,467 கோடியாக குறைந்துள்ளது. 20 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கணினி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications