"சிட்டிசன்களுக்கு" குட் நியூஸ்.. பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்த பிடிஆர்பழனிவேல் தியாகராஜன்
சென்னை: நகர்புற உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய ரூ.1000 கோடியும், மேலும் புதிய மாநகராட்சிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த தலா ரூ.10 கோடியும், புதிய நகராட்சிகளில் தலா ரூ.2 கோடியும் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். நகராட்சி நிர்வாக துறை தொடர்பாக அவர் கூறியதாவது:
திடக்கழிவு மேலாண்மை உட்பட முழுமையான சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான 2வது தூய்மை இந்தியா இயக்கம், மத்திய அரசின் நிதி உதவியுடன் அரசால் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கான மாநில பங்கீடாக ரூ.2,169 கோடியுடன் மொத்தம் ரூ.5,465 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகள் ‛பயோ மைனிங்' முறையில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

ரூ.2,130 கோடி
அம்ருத் 2.0 திட்டத்துக்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பு ரூ.13 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகள், பன்னாட்டு நிதி நிறவனங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் பங்களிப்பின் வாயிலாக இத்திட்டத்தின் மூலம் பல்வேறு குடிநீர் வழங்கல், கழிவுநீர் மேலாண்மை திட்டங்களை அரசு செயல்படுத்தும். இந்த அம்ருத் திட்டத்துக்கு ரூ.2,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சிக்கு சிறப்பு நிதி
புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க தலா ரூ.10 கோடி என மொத்தம் ரூ.60 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படும். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட 28 நகராட்சிகளுக்கு தலா ரூ.2 கோடி என மொத்தம் ரூ.56 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படும்

500 பூங்காக்கள்
200 ஆண்டுகளுக்கு முன் ஜூன் 1822ல் ஜான் சல்லீவன் என்ற ஆங்கிலேய அதகாரியால் முதன் முதலாக கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்டது தான் இன்றைய நீலகிரி மாவட்டத்தின் தலைமையிடமான உதகை நகராகும். இதனை நினைவுகூறும் வகையி்ல சிறப்பு திட்டங்களும், நிகழ்ச்சிகளும் மேற்கொள்ள ரூ.10 கோடி சிறப்பு நிதி வழங்கப்படுகிறது. நகர்புற பகுதிகளை பசுமையாக்கி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த 500 பூங்காங்கள் உருவாக்கப்படும்.

ரூ.1000 கோடி ஒதுக்கீடு
நகர்புற உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடந்தது. புதிதாக மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர். நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1000 கோடி, சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1,875 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் எவ்வளவு
இம்மதிப்பீடுகளின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.20 ஆயிரத்து 400.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் போதுமான அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது குடிநீர் வடிகால் வாரியத்தால் 52 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.2,208 கோடி மொத்த மதிப்பீட்டில் 5.64 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்கள் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படும். குடியிருப்புக்கு குடிநீர் (ஜல்ஜீவன்) திட்டத்துக்காக ரூ.3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications