பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் தான் இந்த குஷ்பு... ஆயிரம் விளக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி கலகல
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்பொழுது குஷ்பு சிறந்த பேச்சாளர் என்றும், திறமைசாலி எனவும் முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து குஷ்பு போட்டியிடுகிறார்.
பாஜக வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து குஷ்பு தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குஷ்புவுக்கு புகழாரம்
இந்நிலையில், குஷ்புவிற்கு ஆதரவாக ஆயிரம் விளக்கு தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது குஷ்புவைச் சிறந்த பேச்சாளர் என்றும், திறமைசாலி எனவும் புகழாரம் சூட்டினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் திறமை குஷ்புவிடம் இருப்பதாகவும், அவர் போட்டியிடும் தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

ஆசி பெற்ற வேட்பாளர்
பிரதமர் ஏழை, எளிய மக்களுக்காகவும், பெண்களுக்காகவும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், அத்தகைய பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர் தான் குஷ்பு என்றும் முதல்வர் குறிப்பிட்டார். அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித்தரப்படும் என்றும், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனக் கூறிய முதலமைச்சர், ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை குஷ்பு நிறைவேற்றித் தருவார் எனக் கூறினார்.

எதிரி கட்சியா?
ஆயிரம் விளக்கு தொகுதி தங்களது கோட்டை எனக்கூறும் திமுக, இதுவரை தொகுதிக்காக என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு நூலகம் கட்டப்பட்டதா? திமுக தனது குடும்ப வளர்ச்சியை மட்டுமே பார்க்கும் என்றார். அண்மையில் முதலமைச்சரின் தாயார் காலமான நிலையில் அவரை குறித்து திமுகவினர் மிகவும், இழிவாகவும், கேவலமாகவும் பேசியுள்ளனர் என்றும் அவர் விமர்சித்தார்.

பெண்கள் பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம்
ஆயிரம் விளக்கு தொகுதி தங்களது கோட்டை எனக்கூறும் திமுக, இதுவரை தொகுதிக்காக என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு நூலகம் கட்டதா திமுக தனது குடும்ப வளர்ச்சியை மட்டுமே பார்க்கும் என்றார். அண்மையில் முதலமைச்சரின் தாயார் காலமான நிலையில் அவரை குறித்து திமுகவினர் மிகவும், இழிவாகவும், கேவலமாகவும் பேசியுள்ளனர் என்றும் அவர் விமர்சித்தார்.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications